உசிலம்பட்டி- அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அய்யப்பன் மக்களை நேரில் சந்தித்து காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 6ம்தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்றது. இதற்கிடையே மே 2ம்தேதி பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக அதிக இடங்களை பிடித்து வெற்றிபெற்று நாளை தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக அய்யப்பன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக கூட்டணி வேட்பாளராக கதிரவன், அமமுக வேட்பாளராக மகேந்திரன் போட்டியிட்டார்.

இந்நிலையில் திமுக மற்றும் அமமுகவை காட்டிலும் 71,255 வாக்குகள் பெற்று 7,477 வாக்குகள் வித்யாசத்தில் அதிமுக வேட்பாளர் அய்யப்பன் மாபெரும் வெற்றிபெற்றார். இதற்கிடையே அய்யப்பன் எம்எல்ஏவாக பதவியேற்க உள்ள நிலையில் உசிலம்பட்டி அருகே கீழப்புதூரில் உள்ள சத்யாநகர், நேதாஜி நகர், மூக்கையாத்தேவர் தெரு, ராமத்தேவர்தெரு, பிடிம்டிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனது வெற்றிக்காக பாடுபட்ட அதிமுக வின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை வீடு, வீடாக சென்று நேரில் சந்தித்து காலில் விழுந்து நன்றியை தெரிவித்தார். இதில் அதிமுக நகரசெயலாளர் பூமாராஜா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் சென்றனர். உசிலம்பட்டி பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவும் நிலையில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியின் போது முக கவசம் மற்றும் தனிநபர் இடைவெளி கடைபிடிக்கபடவில்லை.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..