கொரோனா ஊரடங்கு; கட்டுப்பாடுகள் குறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்..

கொரோனா ஊரடங்கு; கட்டுப்பாடுகள் குறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்..தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் கொரோனா ஊரடங்கு குறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த இன்று முதல் 20-ம் தேதி வரை கூடுதல் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அது குறித்து சுரண்டை வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கும் விதமாக சுரண்டை பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் தனிக்கை சங்கரநாராயணன்  தலைமை வகித்தார். வீரகேரளம்புதூர் தாசில்தார் வெங்கடேஷ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கீர்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி நிர்வாக அதிகாரி வெங்கட கோபு வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்து அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்கவும், கொரோனாவை கட்டுப்படுத்த வியாபாரிகள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டிய அவசியம் குறித்தும் அதிகாரிகள் விளக்கினர். கூட்டத்தில் சுரண்டை வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ், செயலாளர் ஏடி நடராஜன், துணைத்தலைவர் சிவசக்தி முத்தையா, இணைச் செயலாளர் துரைமுருகன், செய்தி தொடர்பாளர் ராஜகுமார், ஓட்டல் சங்க செயலாளர் ஜேக்கப், பொருளாளர் அழகுசுந்தரம், விநாயகம், மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ், நிர்வாகிகள், கணேசன், வெற்றிவேல், தெய்வேந்திரன், விநியோகஸ்தர் சங்க தலைவர் சுடலை காசி, நிர்வாகிகள் மாடசாமி, பால்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரகுமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசைக்கியப்பா நன்றி கூறினார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image