செமினிபட்டி கிராமத்தில் கள்ளகாதலியை கழுத்தை நெறித்து கொலை செய்து சடலத்தை சாக்கு மூடையில் கட்டிய கள்ளகாதலன் கைது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள செம்மினி பட்டி பகுதியில் கடந்த 7 நாட்களுக்கு முன் அழுகிய நிலையில் பெண் சடலமாக மீட்கப்பட்டார்அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்றஅடையாளம் தெரியாமல் போலீசார் தவித்து வந்தனர்இந்த நிலையில் போலீசாரின் துரித விசாரணையில் இறந்த பெண் வாடிப்பட்டி அருகே உள்ள சி. புதூரை சேர்ந்த பெண் தமிழ் செல்வி (31) என்பது தெரியவந்ததுபோலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த தமிழ்செல்வியின் கணவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாகவும் அதன்பிறகு தமிழ்செல்விக்கு வீடு கட்டுவதற்காக ரூ.80 ஆயிரம் பணம் கடனாக வாடிப்பட்டியை சேர்ந்தமைக்செட் ஆபரேட்டராக பணிபுரியும் லெட்சுமணன் என்பவர் கொடுத்துள்ளார்அதன் பின் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளகாதலாக மாறியுள்ளது அடிக்கடி இருவரும் தனிமையில் காட்டுபகுதிக்குள் சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்இந்த நிலையில் கொடுத்த பணத்தை தமிழ்செல்வியுடன் திருப்பி கேட்டு வந்துள்ளார் லட்சுமணன்ஆனால் தமிழ்செல்வியோ பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறதுஇதனால் ஆத்திரமடைந்த கள்ளகாதலன் லெட்சுமணன் தமிழ்செல்வியை வழக்கம்போல் காட்டு பகுதிக்கு வரவழைத்து அங்கு இருவரும் பேசியபோது தகறாறு ஏற்பட்டு தமிழ்செல்வியை லட்சுமணன் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து உடலை சாக்கு மூடையில் கட்டி குப்பையில் வீசி சென்றது தெரியவந்ததுலட்சுமணனை கைது செய்த வாடிப்பட்டி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image