மதுரை கோட்டத்தில் ரயில் பார்சல் கட்டணம் அதிரடியாக குறைப்பு.

மதுரை: தென்னக ரயில்வேயில் ரயில் பார்சல் கட்டணங்கள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளதாக மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து தென்னக ரயில்வேவில் மதுரை கோட்டம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “ரயில்வே பார்சல் கட்டணங்கள் ரயிலின் குறிப்பிட்ட வகைக்கேற்பவும் அதன் பயன்பாட்டுச் சதவீதத்தைப் பொறுத்தும் நிர்ணயிக்கப்படுகின்றன. கட்டணங்கள் நான்கு வகையாகப் பெயரிடப்பட்டுள்ளன. அவை ராஜ் தானி, பிரிமியர், ஸ்டாண்டர்ட், மற்றும் லக்கேஜ் ஆகியவையாகும். முதல் மூன்றும் பார்சல் கட்டண வகையைச் சேர்ந்தது.பயணம் செய்யும் ரயிலிலேயே பார்சல் எடுத்துச் செல்வதற்கும் அல்லது பயணத்தின்போது எடுத்துச் செல்லும் பொருட்கள் மீதும் லக்கேஜ் கட்டணம் விதிக்கப்படும். தற்போது மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் சில ரயில்களுக்கான பார்சல் கட்டணம் ‘ராஜ் தானி’ வகையிலிருந்து ‘பிரிமியர்’ வகையாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போதைய கட்டணத்திலிருந்து பார்சல் கட்டணம் 33 சதவீதம் குறைகிறது.வண்டி எண் 02632 திருநெல்வேலி – சென்னை எழும்பூர் நெல்லை சிறப்பு ரயில், வண்டி எண் 06106 திருச்செந்தூர் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், வண்டி எண் 02662 செங்கோட்டை – சென்னை எழும்பூர் பொதிகை சிறப்பு ரயில், தஞ்சாவூர், கும்பகோணம் மெயின் லைன் வழியாக இயக்கப்படும். வண்டி எண் 06852 ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், விருத்தாசலம் கார்டு லைன் வழியாக இயக்கப்படும். வண்டி எண் 02206 ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்வண்டி எண் 02652 பாலக்காடு – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஆகிய ரயில்களுக்கான பார்சல் கட்டணம் 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணச் சலுகை உடனடியாக அமலுக்கு வருகிறது. உதாரணமாக நெல்லை சிறப்பு ரயிலில் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு 100 கிலோ கிராம் பார்சல் கொண்டு செல்ல பழைய கட்டணம் ரூபாய் 290. தற்போதைய குறைக்கப்பட்ட கட்டணம் ரூபாய் 191 ஆக குறைக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image