Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கொலை செய்த குற்ற உணர்ச்சி.. தூக்கில் தொங்கிய வழக்கறிஞர்..

கொலை செய்த குற்ற உணர்ச்சி.. தூக்கில் தொங்கிய வழக்கறிஞர்..

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் யோகா ஆசிரியரை கொலைசெய்து, குற்ற உணர்ச்சியில் ஒருமாதம் கழித்து தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட வழக்கறிஞரால் பரபரப்பு. காவல்துறையினரின் அலட்சியப் போக்கினால் தான் தனது மகள் உயிர் பறிபோனதாக கொலையுண்ட சித்ரா தேவியின் தந்தை பரபரப்புப் பேட்டி.

மதுரை மாவட்டம் திருமங்கலம் கற்பகநகர் அருகே உள்ள ஆறுமுகம் நகரை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்-(45) இவரது மனைவி விஜி-(35), இவர்களுக்கு ஹரி ஸ்ரீ (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற 10 வயதில் பெண் குழந்தை உள்ளது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று ஹரிகிருஷ்ணன் தனது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வழக்கறிஞராக வேலை பார்த்துவருகிறார். அதே போல் பசும்பொன் தெருவில் வசித்து வருப்பவர் சித்ராதேவி-(32) இவரது கணவன் தங்கராஜ்-(41), சித்ராதேவியும் கருத்துவேறுபாடு காரணமாக தனது கணவனை பிரிந்து யோகா ஆசிரியராக பணிபுரிந்து தனது தந்தை கண்னையாவுடன் வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணனின் மகள் ஹரி ஸ்ரீ சித்ராதேவியிடம் யோகா பயின்று வருகிறாள். தனது மகளை யோகா வகுப்பிற்கு அனுப்புவதற்காக வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் சித்ரா தேவியிடம் சென்று வரும் சமயத்தில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுவந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி சித்ராதேவி இரு சக்கர வாகனத்துடன் தலை மறைவாகியுள்ளார் என கூறப்பட்டு வந்தது.

இதனால் தந்தை கண்ணையா மகள் சித்ராதேவி காணாமல் போனதாக திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 05-ஆம் தேதியன்று புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்திவந்தனர். இதில் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணனுக்கும், தனது மகளுக்கும் தொடர்பு இருந்ததாகவும், அவர்கள் பேசிய போன் ஆடியோவை போலீசாருக்கு கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து ஹரிகிருஷ்ணனே தனது மகளை கொலை செய்து இருக்கலாம் என சித்ரா தேவியின் தந்தை கண்ணையா திருமங்கலம் துணைகண்காணிப்பாளர் வினோதிணியிடம் மற்றும் மதுரை காவல் ஆணையர்க்கும், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவினருக்கும் புகார் மனு அளித்துள்ளார்.

புகார் அளித்தும் காலம் தாழ்த்திய போலீசார் இது தொடர்பாக விசாரணை எதுவும் செய்யாமல் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஹரிகிருஷ்ணன் உடலை கைப்பற்றினர்.

மேலும் ஹரிகிருஷ்ணன் தனது கைகளால் எழுதப்பட்ட கடிதத்தையயும் போலீசார் கைப்பற்றியுள்ளனர், அவரை எழுதிய அந்த கடிதத்தில் சித்ராதேவியை தானே கொலை செய்து கழிவறையில் வைத்து புதைத்து இருப்பதாகவும் இது அனைத்தும் தானே செய்ததாகவும், எனது சாவுக்கு யாரும் காரணம் அல்ல எனவும் கொலை செய்த குற்றத்தை பொறுக்க முடியாமல், தனக்குத்தானே தண்டைனையை ஏற்றுக் கொண்டதாகவும், மேலும் சித்ராதேவியின் இருசக்கர வாகனம் மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் இருப்பதாகவும், அந்த கடிதத்தில் எழுதி இருந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். யோக ஆசிரியரை கொலை செய்து தனது வீட்டின் கழிவைறையில் கொலை செய்து புதைத்த சம்பவம் திருமங்கலம் நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சித்ராதேவியை கழிவறைக்குள் புதைத்த இடத்தை இன்று மாலை 6 மணி அளவில் மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவர்களை வைத்து தோண்டி எடுக்கப்பட இருந்த நிலையில் தற்போது வரை யாரும் வராததால் உறவினர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

மேலும் காவல்துறையினரின் அலட்சியப் போக்கினால், தனது மகளின் உயிர் பலியாகியுள்ளதாக சித்ரா தேவியின் தந்தை குற்றம்சாட்டியதுடன், தங்களுக்கு நீதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!