சோழவந்தானில் திமுக சார்பில் கபசுர குடிநீர் முககவசம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் நகர திமுக சார்பாக அமோக வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் முக கவசம் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். சோழவந்தான் மாரியம்மன் கோவில், வட்ட பிள்ளையார் கோவில், பஸ் நிலையம், காமராஜர் சிலை ஆகிய இடங்களில் திமுக நகர் சார்பாக நிகழ்ச்சி நடை பெற்றது நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் முனியாண்டி தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பொறுப்புக் குழு உறுப்பினர் ராஜா என்ற பெரிய கருப்பன், மாவட்ட பிரதிநிதி கண்ணன், நகர மகளிர் அணி அமைப்பாளர் சசிகலாதேவி, சக்கரவர்த்தி, முன்னாள் பேரூராட்சி தலைவர் அய்யப்பன் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த நிர்வாகி சங்கரபாண்டி வரவேற்றார். திமுக அமோக வெற்றி பெற்றது பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் இனிப்பு முக கவசம் வழங்கினார்கள் இதில் நிர்வாகிகள் தவமணி கௌதமராஜா, சரவணன், பெரியசாமி, முத்துவேல், காளிதாஸ் , தர்மா, சி.பி.சிற்றரசு, செந்தில்வேல், நாகேந்திரன், தீர்த்தம் என்ற ராமன், தொழில்நுட்ப அமைப்பாளர் பார்த்திபன், குருசாமி, கோதண்டம், சிட்டி பாபு, காங்கிரஸ் கட்சி எஸ்சி துறை மாவட்ட தலைவர் சங்கரபாண்டி, நகரதலைவர் முத்துப்பாண்டி, ராமன், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர் பேரூர் மக்களுக்கு திமுக சார்பில் நன்றி தெறிவிக்கபட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply