மதுரை தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப்பணிகள் துறை சார்பாக மருத்துவமனை தனியார் தங்கும் விடுதி மற்றும் ஹோட்டல்கள் தீ தடுப்பு.. எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம்…

மதுரை தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப்பணிகள் துறை சார்பாக மருத்துவமனை தனியார் தங்கும் விடுதி மற்றும் ஹோட்டல்கள் தீ தடுப்பு.. எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம்…..கடந்த குஜராத் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர் . தமிழ்நாடு தியணைப்பு – மீட்புப்பணிகள் துறை இயக்குநர் அறிவுறுத்தலின்படி , மருத்துவமனைகளில் நிகழும் தீ விபத்தினை தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தீ பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றது . அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீபாதுகாப்பு குறித்த கருத்தரங்கு மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சிக்கு தீயணைப்பு மீட்புப்பணிகள் துறையின் தென்மண்டல் துணை இயக்குநர் விஜயகுமார் தலைமையேற்று மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படவேண்டிய தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார் . மருத்துவமனைகளில் மின்சாரத்தினால் ஏற்படும் தீ விபத்துகள் குறித்தும் அதனை தவிர்ப்பது குறித்தும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மதுரை மண்டல பாதுகாப்பு பொறியாளர் கொண்டல்ராஜ் சிறப்புரையாற்றினார் . இக்கருத்தரங்கு கூட்டத்தில் மதுரை மாவட்டத்தை சார்ந்த சுமார் 500 அரசு மற்றும் தனியார் மருத்துவமனை பிரதிநிதிகள் பங்கேற்றனர் . மேலும் இக்கூட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையை சார்ந்த மாவட்ட அலுவலர் வினோத் மற்றும் பிற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் பிற துறை வல்லுநர்கள் பங்கேற்றனர் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..