பிதாகோரசின் தேற்ற எண்பிப்பு நிறுவிய ஜெர்மனிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் யோகான் தோபியாசு மேயர் பிறந்த தினம் இன்று (மே 5, 1752).

யோகான் தோபியாசு மேயர் (Johann Tobias Mayer) மே 5, 1752ல் தோபியாசு மேயருக்கும் மரியாவுக்கும் முதல் மகனாகப் கோட்டிங்கனில் பிறந்தார். இவரது தந்தையார் கோட்டிங்கனில் புவிப்பரப்பியல், இயற்பியல், வானியல் துறைப் பேராசிரியராக விளங்கினார். மேயரின் பத்தாம் அகவையிலேயே தந்தையார் இறந்து விட்டார். 1769ல் கோட்டிங்கன், ஜார்ஜ் ஆகத்து பல்கலைக்கழகத்தில் இறையியலும் மெய்யியலும் கற்றார். இது அப்போது தான் ஆபிரகாம் கோதெல்ஃப் காசுட்னரின் கீழ் தொடங்கப்பட்ட புதிய பல்கலைக்கழகமாகும். காசுட்னருக்குப் பின்னர், இது ஜார்ஜ் கிறித்தோப் இல்ச்டென்பர்கின் கீழ் இயங்கியது. இவர் 1773ல் பட்டம் பெற்றதும் கணிதவியல் விரிவுரையாளராகவும் வானியலாளராகவும் பணிபுரிந்தார். நவம்பர் 17, 1779ல் அல்தோர்ஃப் பல்கலைக்கழகத்தால் அழைக்கப்பட்டுள்ளார். அங்கே இவர் 1780 முதல் 1786 வரை பணிபுரிந்தார்.

பிறகு இவர் எர்லாங்கன் நியூரன்பர்கில் அமைந்த பிரீட்ரிக் அலெக்சாந்தர் பல்கலைக்கழகத்தில் கணிதவியலும் இயற்பியலும் கற்பித்தார். இவர் 1799ல் கோட்டிங்கனில் இலிச்டென்பருக்குப் பிறகு தொடர்ந்து அப்பல்கலைக்கழகத்துக்குத் தலைமை வகித்துள்ளார். இவரது மாணவர்களில் என்னோ கீரன் டிர்க்சன் அடங்குவார். டிர்க்சன் 1820ல் முனைவர் பட்டம் பெற்றதும், கார்ல் குசுதவ் யாகோபுக்கு அறிவுரையாளராக விளங்கினார். மேயருக்கும் அவரது மனைவி யோகான்னாவுக்கும் ஐந்து குழந்தைகள் பிறந்தனர். இலியனார்டோ டா வின்சியினது எனக் கருதப்பட்ட பிதாகோரசின் தேற்ற எண்பிப்பு இப்போது மேயர் 1772ல் நிறுவியதாகக் கருதப்படுகிறது.

மேயர் கணிதவியல், இயற்கை அறிவியல் பாடநூல்களுக்குப் பெயர்போனவர். இவர் 1801 இல் எழுதிய இயற்பியல் பாடநூலான Anfangsgründe der Naturlehre zum Behuf der Vorlesungen über die Experimental-Physik எனும் நூல் ஜெர்மன் மொழிபேசும் நாடுகளில் எல்லாம் மிகுந்த தாக்கத்தைச் செலுத்தியது. இவரது வானியல், செய்முறை இயற்பியல் ஆய்வுகள் Annalen der Physik எனும் இதழில் வெளியாகின. பிதாகோரசின் தேற்ற எண்பிப்பு நிறுவிய ஜெர்மனிய இயற்பியலாளர், யோகான் தோபியாசு மேயர் நவம்பர் 30, 1830ல் தனது 78வது அகவையில், கோட்டிங்கனில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply