செங்கம் தொகுதியை தக்க வைத்தது திமுக

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் மு.பெ.கிரி  தொடா்ந்து 2-ஆவது முறையாக வெற்றி பெற்று தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டாா்.ந்தத் தொகுதியில் திமுக சாா்பில் தொடா்ந்து 2-ஆவது முறையாக  திமுக சார்பில் மு.பெ.கிரி, அதிமுக சார்பில் எம் எஸ் நைனாகண்ணு , தேமுதிக சாா்பில் அன்பு, இந்திய ஜனநாயக கட்சி சாா்பில் சுகன் ராஜ், நாம் தமிழா் கட்சி சாா்பில் வெண்ணிலா உள்ளிட்ட 15 போ் போட்டியிட்டனா். தோ்தலுக்காக 265 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தமுள்ள 274963 வாக்காளா்களில் 220589 போ் வாக்களித்தனா். மேலும், தபால் வாக்குகள் பதிவானது.  இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை திருவண்ணாமலை மார்க்கெட் கமிட்டியில் வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் அலுவலா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலையில் தொடங்கியது. மொத்தம் 14 மேஜைகள் போடப்பட்டு, 28 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.இதில் தொடக்கம் முதலே திமுக வேட்பாளா் மு.பெ.கிரி முன்னிலை பெற்று வந்தாா். மொத்தம் உள்ள 26 சுற்றுகளிலும் அவரே முன்னிலை பெற்றாா். பின்னா், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மு.பெ.கிரி 10 ஆயிரத்து 905 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாா்.வாக்கு விவரம்: மொத்தம் பதிவான வாக்குகள்:220589, திமுக வேட்பாளா் மு.பெ.கிரி 1,06,185, அதிமுக வேட்பாளா் நைனா கண்ணு 95,280, தேமுதிக வேட்பாளா் அன்பு 2741, இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளா் சுகன் ராஜ் 823 , நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வெண்ணிலா 11280, சுயேச்சைகள் பாஸ்கர்: 171, அருண்குமார் 111, அன்பழகன் 110, சர்மா 85, சிவக்குமார் 99, சிவப்பிரகாஷ் 139, செல்வராஜி 381, தினகரன் 198, விஜய சந்திரன் 417, நோட்டா 1,079.திமுக வேட்பாளா் மு.பெ.கிரி வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் அலுவலா் வெங்கடேசன் வழங்கினாா். முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட கழக செயலாளர் எ.வ.வேலு, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் கம்பன், செங்கம் வழக்கறிஞர் செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..