பரமக்குடி அருகேமூதாட்டியை கொன்று நகை பறிப்பு.. பெண் உள்பட இருவர் கைது.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா அரியனேந்தல்
கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவரது மனைவி காளிமுத்தம்மாள், 93. இவர் ஏப்ரல் 30 ஆம் தேதி காலை தனது வழக்கமான விவசாய பணிகளுக்காக வீட்டின் அருகே உள்ளதென்னந்தோப்புக்கு சென்றவர், நீண்ட நேரமாகியும் மதிய உணவு அருந்த வீட்டிற்கு வராததால்,சந்தேகம் அடைந்த காளிமுத்தம்மாளின் உறவினர்கள் தென்னந்தோப்புக்கு சென்று  தேடிப்பார்த்தனர். அங்கு பூட்டப்பட்டிருந்த பம்புசெட் அறையை திறந்து பார்த்தபோது,
காளிமுத்தம்மாள் சந்தேகத்திற்கு இடமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் காதில் அணிந்திருந்த தண்டட்டி மற்றும் கையில் அணிந்திருந்த வளையல்கள் என 12 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது. இது தொடர்பாக, காவல்துறைக்கு தகவலின் பேரில், பரமக்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் பரமக்குடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாண்டியன் மற்றும் விரல்ரேகை பிரிவு போலீசார், தடய அறிவியல் அலுவலர் அடங்கிய போலீஸ் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை துவக்கினர். காவல்துறையின் துப்பறியும்
நாய் ரோமியோவும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், தங்க நகையை கொள்ளையடிப்பதற்காக காளிமுத்தம்மாள் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.சம்பவ இடத்தை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கார்த்திக், கொலையாளிகளை கைது செய்து நகைகளை மீட்க, பரமக்குடி உட்கோட்டகாவல் துணை கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைத்துஉத்தரவிட்டார். உடன் நேரடியாக களத்தில் இறங்கிய பரமக்குடி உட்கோட்ட துணை காவல்கண்காணிப்பாளர் வேல்முருகன் உடனடியாக விசாரணையை தொடங்கினார். இச்சம்பவம் தொடர்பாக, பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.கொலை சம்பவத்தில் ஈடுபட்டது காளிமுத்தம்மாளின் தென்னந்தோப்பில் வேலைபார்த்த பாண்டியூர் முத்துராக்கு (28), மற்றும் அவரது இரண்டாவது கணவர் மாவிலங்கை வடிவேல் (33), ஆகியோர் என தெரிய வந்தது. உடனே அவர்கள் இருவரையும் பரமக்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் தனதுவிசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணையை துவக்கினார். அவரதுவிசாரணையில், மேற்படி முத்துராக்கு சிறு வயது முதலே காளிமுத்தமாளின் தென்னந்தோப்பில்வேலை பார்த்து வந்த பாண்டியூரை சேர்ந்த அழகர்சாமி என்பவரை திருமணம் செய்து ஒருகுழந்தை பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக பிரிந்துவாழ்ந்து வந்தவர், அதன் பின்னர் மாவிலங்கையை சேர்ந்த வடிவேலுடன் தொடர்பில் இருந்துவந்துள்ளார். மேற்படி முத்துராக்குவை சந்திக்க வடிவேல் அடிக்கடி தென்னந்தோப்புக்கு வந்து செல்லும்போது, காளிமுத்தம்மாள் நகை அணிந்திருப்பதை நோட்டமிட்டு கொள்ளையடிக்கதிட்டமிட்டுள்ளனர். இதன்படி யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க ஏப்ரல் முதல் வாரத்தில்முத்துராக்கு அரியனேந்தலில் இருந்து காலி செய்து, தனது சொந்த ஊரான பாண்டியூருக்கு சென்றவர், ஏப்ரல் 28 ஆம் தேதி அரியனேந்தல் காலனியில் உள்ள அவரது தாயார் வீட்டில் தங்கியுள்ளார்.இந்நிலையில், ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 9 மணியளவில் முத்துராக்கு, வடிவேலுவைபோன் செய்து வரவழைத்து, மோட்டார் ரூமிற்கு வந்த வடிவேலு, காளிமுத்தம்மாளின் கை மற்றும்கால்களை பிடித்து கொண்டு, முத்துராக்கு மிளகாய்பொடியை வீசி, மூக்கையும், வாயையும்கைகளால் அமுக்கி காளிமுத்தம்மாளை கொலை செய்து, காது மற்றும் கைகளில் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்துவிட்டு இருவரும் தப்பி சென்றுவிட்டதாகவும், வடிவேலு தனதுசொந்த ஊரான மாவிலங்கைக்கு சென்றுவிட்டார். பின்னர், வடிவேலு கொள்ளையடித்தநகைகளை தனது வீட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்ததை ஒப்புதல் வாக்குமூலம் அளித்துபோலீசாரிடம் ஒப்படைத்தார்.சம்பவம் நடந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்த 10 மணி நேரத்திற்குள் சிறப்பாகவழக்கை புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்ததுடன், கொள்ளையடிக்கப்பட்டநகைகளை மீட்ட பரமக்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகனை, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக்,வெகுவாக பாராட்டினார்.

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply