கீழக்கரை அரசு மருத்துவமனையில் கொரோனோ சிகிச்சை பிரிவு தொடங்க விடுதலை சிறுத்தை கட்சி வலியுறுத்தல்..

கீழக்கரை அரசு மருத்துவமனையில்  கொரானா சிகிச்சை பிரிவு அமைத்து  மருத்துவர்களை அதிகப்படுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளது. இது சம்பபந்தமாக கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளரும் சமூக ஆர்வலருமான பாசித் இல்யாஸ் கூறியதாவது, “கீழக்கரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு எதுவும் இல்லை என்றும், வெண்டிலட்டர், ஆக்சிஜன், வசதி எதுவும் கிடையாது என்பது வேதனை அளிக்கிறது.

வெண்டிலட்டர், ஆக்சிஜன், வசதிகளுடன் குறைந்தது ஐம்பத்து படுக்கை வசதிகளுடன் கூடிய அதிகமருத்துவர்கள் போர்கால அடிப்படையில் ஏற்பாடு செய்ய தர வேண்டும். கீழக்கரையில் பல நல்லுங்கள், கட்சிகள், இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள்,  பல விசயங்களுக்கு நாம் தனி, தனியாக, உதவி செய்து வருகிறோம். மக்களுக்கு தேவையான ஒன்றை ஏன் நம்மால் பண்ண முடியவில்லை என்பதை நினைக்கும் போது வேதனை அளிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது.

இதை பற்றி ராமநாதபுரம் MP நவாஸ் கனியிடமும்  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அக்கோரிக்கையில், “கீழக்கரையில் 50 ஆயிரத்திற்கும் மேலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல கிராமங்கள் உள்ளன. இந்த நோயால் பாதிக்கப்பட்ட  மக்கள் மிகவும் சிரமபடுகிறார்கள்.

போர்கால அடிப்படையில்  ஏழை, எளிய, மக்களுக்கு, நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு , கீழக்கரை அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைத்து தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அரசு மருத்துவர்ரகள் இந்த இக்கட்டான சூழலில் உயிரை பணயம் வைத்து பணி செய்யும் வேலையில்ல் சில தனியார் மருத்துவமனையில் அதிக அளவு பணம் வாங்குகிறார்கள் என்று குற்றச்சாட்டும் எழுகிறது. ஏழை, எளிய, மக்கள் பணம் இல்லாமல் மிகவும் சிரமபடுகிறார்கள். தனியார் மருத்துவமனையில் மக்கள் சூழ்நிலை புரிந்து இந்த காலகட்டத்தில் மருத்துவ நிர்வாகம் கருணை உள்ளத்தோடு கொரோனா நோயின் தன்மையைப் புரிந்து உதவி செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம்” என வலியுறுத்தப்பட்டது.

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply