தென்காசி மாவட்டத்தில் உள்ள அதிமுக கோட்டை தகர்ந்தது; திமுக வேட்பாளர் வெற்றி..

தென்காசி மாவட்டத்தில் உள்ள அதிமுக கோட்டை தகர்ந்தது; திமுக வேட்பாளர் வெற்றி.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை அதிமுகவின் கோட்டையாக விளங்கிய சங்கரன் கோவில் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளர் ஈ.ராஜா வெற்றி பெற்றுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம், வாசுதேவநல்லூர் (தனி), சங்கரன்கோவில் (தனி) ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் தென்காசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார்,கடையநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா,ஆலங்குளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன், வாசுதேவநல்லூர் தனி தொகுதியில் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார், சங்கரன்கோவில் தனி தொகுதியில் திமுக வேட்பாளர் ஈ.ராஜா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி 3 தொகுதிகளையும், அதிமுக கூட்டணி 2 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.

மேலும் சட்டப்பேரவை தேர்தலில் தென்காசி மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் குறித்த முழு விபரம் பின் வருமாறு:

தென்காசி தொகுதி

1. எஸ்.பழனி நாடார் (காங்கிரஸ்)- 89,315 வாக்குகள் (வெற்றி)

2. எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் (அ.தி.மு.க.)- 88,945 வாக்குகள்

3. எஸ்.முகம்மது (அ.ம.மு.க)- 9,944 வாக்குகள்

4. ஆர்.திருமலை முத்து (மக்கள் நீதி மய்யம்)- 2,188 வாக்குகள்

5. ஆர்.வின்சென்ட் ராஜ் (நாம் தமிழர் கட்சி)- 15,336 வாக்குகள்

6. கே.எம்.உதயகுமார் (அண்ணா திராவிடர் கழகம்)- 690 வாக்குகள்

7. எஸ்.சந்திரசேகர் (புதிய தமிழகம்)- 878 வாக்குகள்

8. எஸ்.சுரேஷ் குமார் (அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம்)- 119 வாக்குகள்

9. ஆர்.செல்வகுமார் (நாம் இந்தியர் கட்சி)- 319 வாக்குகள்

10. கே.முகுந்தன் (எனது இந்தியா கட்சி)-195 வாக்குகள்

11. எம்.ஜெகநாதன் (அனைத்து மக்கள் புரட்சி கட்சி)- 416 வாக்குகள்

12. ஜெ.ஆரோக்கிய பிரபு (சுயேச்சை)- 428 வாக்குகள்

13. எஸ்.கருப்பசாமி (சுயே)- 216 வாக்குகள்

14. ஏ.பழனிகுமார் (சுயே)- 175 வாக்குகள்

15. பி.பழனிமுருகன் (சுயே)-628 வாக்குகள்

16. ஏ.மாடசாமி (சுயே)- 1,978 வாக்குகள்

17. ஆர்.ரமேஷ் (சுயே)-684 வாக்குகள்

18. எம்.ரீகன்குமார் (சுயே)- 495 வாக்குகள்

19. நோட்டா- 1,159 வாக்குகள்


ஆலங்குளம் தொகுதி

1. மனோஜ் பாண்டியன் (அ.தி.மு.க.)-74,153 வாக்குகள் (வெற்றி)

2. பூங்கோதை (தி.மு.க.)- 70,614 வாக்குகள்

3. ராஜேந்திரநாதன் (தே.மு.தி.க.)- 2,816 வாக்குகள்

4. செல்வகுமார் (மக்கள் நீதி மய்யம்)-.1,454 வாக்குகள்

5. உதயகுமார் (புதிய தமிழகம்)- 1,105 வாக்குகள்

6. சங்கீதா இஷாக் (நாம் தமிழர் கட்சி)- 12,519 வாக்குகள்

7. ஏ.ஹரி நாடார் (சுயே)- 37,727 வாக்குகள்

8. கே.சிவராம் (சுயே)- 436 வாக்குகள்

9. கே.அருண்குமார் (சுயே)- 492 வாக்குகள்

10. எஸ்.சங்கர் கணேஷ் யாதவ் (சுயே)- 376 வாக்குகள்

11. நோட்டா- 1,786 வாக்குகள்


கடையநல்லூர் தொகுதி

1.சி. கிருஷ்ணமுரளி (அ.தி.மு.க.)- 88,474 வாக்குகள் (வெற்றி)

2. கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)- 64,125 வாக்குகள்

3. எஸ்.அய்யாத்துரை பாண்டியன் (அ.ம.மு.க)- 34,216

4. எம்.அம்பிகா தேவி (மக்கள் நீதி மய்யம்)- 1,778

5. எம்.முத்துலட்சுமி (நாம் தமிழர் கட்சி)-.10,136

6. எஸ்.ராஜாராம் (புதிய தலைமுறை மக்கள் கட்சி)- 318

7. எம்.அய்யாத்துரை (சுயே)- 284 வாக்குகள்

8. ஆர்.அய்யாத்துரை (சுயே)- 87 வாக்குகள்

9. கே.ஆவணி ராஜா (சுயே)-.80 வாக்குகள்

10. கே.ராதாகிருஷ்ணன் (சுயே)- 85 வாக்குகள்

11. ஆர்.ராஜா பொன்னுச்சாமி (சுயே)- 259 வாக்குகள்

12. ஏ.கணேசன் (சுயே)- 122 வாக்குகள்

13. ஏ.சங்கர் (சுயே)- 413 வாக்குகள்

14. ஆர்.சிவசுப்பிரமணியன் (சுயே)- 672 வாக்குகள்

15. ஆர்.பூலோகராஜ் (சுயே)- 658 வாக்குகள்

16. கே.மாரி துரைப்பாண்டியன் (சுயே)-96 வாக்குகள்

17. எஸ்.முருகானந்தம் (சுயே)- 532 வாக்குகள்

18. பி.ராஜூ (சுயே)- 247 வாக்குகள்

19. கே.வேலம்மாள் (சுயே)- 672 வாக்குகள்

20. ஆர்.கிருஷ்ணன் (சுயே)- 126 வாக்குகள்

21. எஸ்.சீனிவாசன் (சுயே)- 938 வாக்குகள்

22. நோட்டா- 1,056 வாக்குகள்

வாசுதேவநல்லூர் (தனி)தொகுதி

1. தி.சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க.)- 68,730 வாக்குகள் (வெற்றி)

2. ஏ.மனோகரன் (அ.தி.மு.க.)-66,363 வாக்குகள்

3. எஸ்.தங்கராஜ் (அ.ம.மு.க)-13,376 வாக்குகள்

4. சி.எஸ்.மதிவாணன் (நாம் தமிழர் கட்சி)-16,731 வாக்குகள்

5. வி.பேச்சியம்மாள் (புதிய தமிழகம்)- 3,651 வாக்குகள்

6. எம்.ஈஸ்வரன் (புதிய தலைமுறை மக்கள் கட்சி)- 795 வாக்குகள்

7. எம்.சின்னசாமி (மக்கள் நீதி மய்யம்)- 2,139 வாக்குகள்

8. கே.கருப்பசாமி (எனது இந்தியா கட்சி)- 342 வாக்குகள்

9. பி.ஜெயக்குமார் (தமிழ்நாடு இளைஞர் கட்சி)–544 வாக்குகள்

10. கே.முத்துப்பாண்டி (சுயே)- 323 வாக்குகள்

11. பி.ராமமூர்த்தி (சுயே)- 716 வாக்குகள்

12. நோட்டா- 2,171 வாக்குகள்

சங்கரன்கோவில்(தனி)தொகுதி

1. ஈ.ராஜா (தி.மு.க.)- 71,184 வாக்குகள் (வெற்றி)

2. வி.எம்.ராஜலெட்சுமி (அ.தி.மு.க.)- 65,830 வாக்குகள்

3. ஆர்.அண்ணாதுரை (அ.ம.மு.க.)- 22,676 வாக்குகள்

4. கே.பிரபு (மக்கள் நீதி மய்யம்)- 2,331 வாக்குகள்

5. பி.மகேந்திரகுமாரி (நாம் தமிழர் கட்சி)- 13,823 வாக்குகள்

6. வி.சுப்பிரமணியன் (புதிய தமிழகம்)- 1,941 வாக்குகள்

7. உ.பன்னீர்செல்வம் (தமிழக முற்போக்கு மக்கள் கட்சி)- 187 வாக்குகள்

8. எம்.பாலமுருகன் (பகுஜன் திராவிட கட்சி)- 97 வாக்குகள்

9. கே.மதன்குமார் (எனது இந்தியா கட்சி)- 13,823 வாக்குகள்

10. ஏ.கணேசன் (சுயே)- 107 வாக்குகள்

11. ஆர்.கருத்தப்பாண்டியன் (சுயே)- 408 வாக்குகள்

12. பி.குருராஜ் (சுயே)- 303 வாக்குகள்

13. எஸ்.முத்துக்குட்டி (சுயே)-389 வாக்குகள்

14. எம்.வள்ளியம்மாள் (சுயே) –889 வாக்குகள்

15. ஏ.வெற்றிமாறன் (சுயே) – 619 வாக்குகள்

16. நோட்டா- 1955 வாக்குகள்

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..