கொடைரோடு அருகே போலீஸ் நண்பர் குழுவில் இருந்தவர் போலீஸ் என மிரட்டி டிரைவரிடம் பணம் பறிப்பு.

கொடைரோடு அருகே போலீஸ் போல நடித்து டிரைவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து. கேரள மாநிலத்துக்கு அட்டைப் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது அந்த வேனை. சிவகாசி பரசக்தி காலனியைச் சேர்ந்த சித்திக் வயது 30. என்பவர் ஓட்டினார். கடந்த 23ந் தேதி பகலில். திண்டுக்கல். மதுரை நான்குவழிச் சாலையில் உள்ள பள்ளபட்டி பிரிவு சோதனைச் சாவடியில் அருகே வேன் வந்தது அப்போது. அந்தச் சோதனைச்சாவடியில் காக்கி பேண்ட் மற்றும் கலர் சட்டை அணிந்திருந்த 30 வயதுஉடைய வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அந்த வேனை வழிமறித்து அவர் நிறுத்திரர். தன்னை போலீஸ்காரர் என்று கூறி அவர். சித்திக்கிடம் விசாரணை நடத்தினார். குடிபோதையில் இருக்கிறீர்களா வேணுக்கான உரிய ஆவணங்கள் உள்ளதா என்று விசாரித்தார்.ஒரு கட்டத்தில் அவர். ரூ.5 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே வேணு அங்கிருந்து விடுவிக்க முடியும் என்று கூறி மிரட்டினார். சித்திக் இடம் பணம் இல்லை. இதனால் ஆன்லைன் மூலம் தனது வங்கி கணக்கில் இருந்து அந்த நபரின் வங்கிக் கணக்குக்கு ரூ.5 ஆயிரத்தை சித்திக பணபரிவர்த்னை செய்தார்அதன் பிறகு சித்திக் வேனுடன் அங்கிருந்து புறப்பட்டார். இதற்கிடையே நடந்த சம்பவத்தை சிக்திக் தனது செல்போன் மூலம் விடியோ எடுத்து விட்டார். இது குறித்து திண்டுக்கல் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு அலுவலகத்க்கு ஆன்லைன் மூலம் விடியோ ஆதாரத்துடன் சித்திக் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க. அம்மையநாயக்கனூர் போலிசாருக்கு .போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார் விசாரணையில் சித்திக்கிடம் பணம் பறித்தது போலீஸ்காரர் இல்லை என்று தெரியவந்தது. மேலும் கொடைரோடு அருகே உள்ள பள்ளபட்டியை அடுத்த கந்தப்பக்கோட்டையை சேர்ந்த தவமணி வயது 29 என்று தெரியவந்தது. இவர் தான் தன்னை போலீஸ் என்று கூறி சித்திக்கிடம் பணம் பறித்துள்ளார்இது தொடர்பாக போலீசார்  வழக்குப்பதிவு செய்து தவமணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.கைதான் தவமணி போலீஸ் நண்பர்கள் குழுவில்  இருந்தார்.அப்போது போலீசாருடன்  ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது  அந்த குழுவை தடை செய்து விட்டதால். தவமணி வேலையில்லாம் விட்டில்  இருந்தார். இதனால் போலீஸ் போல நடித்து சித்திக்கிடம் பணத்தை பறித்துள்ளார். இவர் வேற சில டிரைவர்களிடமும். தன்னை போலீஸ் என்று கூறி பணத்தை பறித்ததிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..