உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் 5 நல்லெண்ணெய் பாக்கெட்டை திருடிய பெண்ணை சிசிடிவி காட்சியின் மூலம் போலீசார் கைது செய்து விசாரணை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள தனியார் (ரத்தினம் சூப்பர் மார்க்கெட்) சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடையில் மூன்று பெண்கள் பொருட்கள் வாங்குவதாற்காக உள்ளேயே சுற்றி திரிந்துள்ளார். அப்போது கடையில் இருந்த ஊழியர்கள் அந்த பெண்களை கேமராவில் பார்த்துகொண்டிருக்க அப்போது அங்குள்ள 1லிட்டர் நல்லெண்ணெய் கொண்ட 5பாக்கெட்டுக்களை மூன்று பெண்களும் எடுத்து சேலைக்குள் வைத்து திருடிகொண்டிருந்தனர். இதனையடுத்து அங்கு சென்ற கடை ஊழியர் பார்த்தபோது திருடிய நல்லெண்ணெய் பாக்கெட்டை சேலையிலிருந்துவெளியே எடுத்து கீழே போட்டுவிட்டுசென்றபோது கடை ஊழியர்கள் பிடித்த போது ஒரு பெண் மட்டும் சிக்கினார். அந்த பெண்ணை ஊழியர்கள் உசிலம்பட்டி நகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனைதொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் அவர் விக்கிரமங்கலம் அருகே உள்ள வடகாட்டுப்பட்டியைச் சேர்ந்த பெரியதேவன் மனைவி ராக்கம்மாள்(59) என்பதும், அவர் மதுரையில் உள்ள கொண்ணவாயன் பகுதியில் ஒருவீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு வசித்து வருவதும், மதுரையில் இதுபோன்று பல இடங்களில் ஜவுளிகடைகள், சூப்பர்மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் திருடடில் ஈடுபட்டு வருவதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர் மீது மதுரையில் உள்ள பல காவல்நிலையங்களில்வழக்குபதிவுசெய்யபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் ராக்கம்மாள் என்ற அந்த பெண்ணை கைதுசெய்து , தப்பியோடிய மற்ற இரண்டு பெண்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image