செங்கம் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் -மாவட்ட நிர்வாகம் தீர்வு காண பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் அனுதினமும் காலை முதல் மாலை வரை ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.செங்கம் நகரில் துக்காப்பேட்டை முதல் பழைய பேருந்து நிலையம் வழியாக, போளூா் மேம்பாலம் வரை காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதற்குக் காரணம் சென்னை, பெங்களூா் போன்ற பகுதியிலிருந்து நகரில் உள்ள கடைகளுக்கு பொருள்கள் ஏற்றி வரும் லாரிகளை சாலையோரம் நிறுத்தி மூட்டைகளை இறக்குவது, சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பால் சாலை குறுகிப்போனது ஆகியவையாகும்.மேலும் சாலையின் இருபுறமும் தள்ளுவண்டி, தற்காலிக் கடைகள் என சாலையை ஆக்கிரமித்துவிட்டன.இதனால் வாகனங்கள் சாலையோரம் நின்றால் வேறு வாகனம் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது.மேலும், சுபவிசேஷ நாள்களில் அதிகளவில் மக்கள் கூட்டம் வருவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமரன் தலைமையில் காவல்துறையினர் சாலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இருந்தபோதிலும் சில தற்காலிக கடைகளால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது நெடுஞ்சாலைத் துறையினரும் கண்டுகொள்வதில்லை. என பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகளும் ,பொதுமக்களும், அரசு அலுவலர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமலும் பல்வேறு சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.இதனால், மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணவேண்டும் என பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image