தென் இந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பாக மறைந்த சின்ன கலைவாணர் விவேக் உருவப்படத்திற்கு அஞ்சலி.

கோவில்பட்டியில் 1961 ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகர் விவேக் கலைவாணர் என்.எஸ்.கே. போல் படங்களில் சமூக சீர்திருத்த கரு,த்துகளை எடுத்துக்கூறியவர்1987 இல் இயக்குநர் பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் படம் மூலம் அறிமுகமானார் . தமிழ் சினிமாவில் 220 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார் . குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்துள்ள இவர் , 2000 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் மட்டுமே 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் . 2009 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது .சிறந்த காமெடியனாக தமிழக அரசின் விருதை 5 முறை பெற்றுள்ளார் . தமிழகம் முழுவதும் 1 கோடி மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் .இன்று மதுரையை தலைமையிடமாகக் கொண்டு சிம்மக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் தென் இந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பாக மறைந்த சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து தீபமேற்றி அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர்பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் மணவாளன் அவர்கள் கூறுகையில் கடந்த 15 3 2001 அன்று மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்த எங்கள் தென் இந்திய நுகர்வோர் மாநாட்டில் தான் நடிகர் விவேக் அவர்களின் சிறந்த நகைச்சுவை நடிப்பையும் அதில் உள்ள பகுத்தறிவுக் கருத்துக்களையும் பாராட்டி அவருக்கு சின்ன கலைவாணர் என்ற சிறப்பு விருது எங்கள் அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார் மேலும் அவர் கூறுகையில் நடிகர் விவேக் அவர்களின் இழப்பு தமிழ் திரையுலகத்தினருக்கும் தமிழ் மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும் அவரது நகைச்சுவை கலந்த பகுத்தறிவு கருத்துக்களின் மூலம் நம் தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் அவர் என்றும் நிறைந்திருப்பார் என்று கூறினார்உடன் தென்னிந்திய பொதுச் செயலாளர் வீ சிங்கராஜ், மாவட்ட தலைவர் சாகுல், கௌரவ தலைவர் G.K. ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்…

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image