உசிலம்பட்டி – நடிகர் விவேக்கின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர் நேசித்த மரக்கன்றுகளை நட்டு வைத்து அஞ்சலி செலுத்திய 58 கிராம கால்வாய் இளைஞர்கள்.

இயற்கையின் மீது அதிக ஆர்வம் கொண்ட காமெடி நடிகர் விவேக் சுமார் 60இலட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்து இயற்கையை பாதுகாத்து வந்தார். இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நடிகர் விவேக் தனியார் மருத்துவமனையில் காலமானார். இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு இரங்கல். தெரிவிக்கும் விதமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் உள்ள கண்மாய் கரை பகுதியில் நடிகர் விவேக்கின் மறைவிற்கு உசிலம்பட்டி 58கிராம கால்வாய் இளைஞர்கள் குழு சௌந்தரபாண்டியன் தலைமையிலான தன்னார்வ இளைஞர்கள் விவேக்கின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மரக்கன்றுகள் மீது ஆர்வம் கொண்டதால் அவரது நினைவாக மரக்கன்றுகள் நட்டு வைத்து இரங்கலை தெரிவித்தனர்.

உசிலை சிந்தனியா

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image