திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் குளிக்கச் சென்ற முதியவர் பலி.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சன்னதி தெருவைச் சேர்ந்த சண்முக முதலியார் மகன் பஞ்சாட்சரம் (வயது 60) என்பவர் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். பஞ்சாட்சரம் தினமும் மாலை வேளையில் சரவணப் பொய்கையில் குளிக்க வருவார்.நேற்று மாலை 5 மணி அளவில் குளிக்கச் சென்றபோது ஆழமான பகுதிக்கு சென்று எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்து நீரில் மூழ்கி இறந்துவிட்டார் அப்பகுதியில் குளிக்க வந்த மற்றொரு நபர் இதுகுறித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து பஞ்சாட்சரம் உடலை கைப்பற்றி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image