திருச்சிற்றம்பலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்;17 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு.

பாவூர்சத்திரம் ஹீரோ மணியரசி மோட்டார்ஸ், பாவூர்சத்திரம் கண் தான விழிப்புணர்வு குழு, பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதியுடன் இணைந்து நடத்திய 52-வது இலவச கண் சிகிச்சை முகாம் திருச்சிற்றம்பலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு அரிமா சங்க பொருளாளர் அரிமா டி.சுரேஷ் தலைமை வகித்தார். ஆசிரியைகள் சே.ஆரோ ஹெலினா, வே.லாவண்யா முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை ஏ. சராபின் வரவேற்றார். கண் தான விழிப்புணர்வு குழு நிறுவனரும், கண் தான மாவட்டத்தலைவருமான அரிமா கே.ஆர்.பி. இளங்கோ தொகுப்புரை ஆற்றினார். மணியரசி மோட்டார்ஸ் நிறுவனர் சேர்மபாண்டி முகாமினை தொடங்கி வைத்தார். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று பரிசோதனை செய்தனர். 120 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 17 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அரிசி ஆலை உரிமையாளர் லட்சுமி சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரிமா எஸ்.பரமசிவம் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் செய்திருந்தார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image