மதுரை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தினுள் லேப்டாப்புடன் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சென்றதால் பரபரப்பு‌.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட கீழக்குயில்குடி பகுதியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள.இந்நிலையில் இன்று மதியம் பல்கலைக்கழக வளாகத்தில் மடிக்கணினியுடன் மர்ம நபர்கள் உள்ளே புகுந்ததாக சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடேசனுக்கு திமுக தொண்டர்கள் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடேசன் தனது ஆதரவாளர்களுடன் பல்கலைக்கழகத்திற்கு விரைந்து வந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு புகார் அளித்தார்.வேட்பாளர் புகார் அளித்ததன் அடிப்படையில் சோழவந்தான் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜஸ்டின் ஜெயபால் மற்றும் உசிலம்பட்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ்குமார் இவர்களுடன் வாடிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த ஆரோக்கியராஜ் ஆகியோர் விரைந்து வந்து வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைத்துள்ள அறைகளுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்தவர்கள் தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையின் உரிய அனுமதியுடன் பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்காக லேப்டாப்புடன் வருகை தந்தனர் என்று விசாரணையில் தெரியவந்தது.மேலும் தேர்தல் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் வேட்பாளர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் உள்ளே அனுமதிதற்கு மாவட்ட ஆட்சியரிடம் நாளை எழுத்துப்பூர்வமாக புகார் ஒன்றினை கொடுத்துவிட்டு இது சம்பந்தமாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர உள்ளோம் என சோழவந்தான் தொகுதி வேட்பாளர் வெங்கடேசன் கூறியுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image