செங்கம் பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சி சாா்பாக நகரின் பல்வேறு பகுதிகளில் கரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக வாகனம் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.செங்கம் பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் தலைமையில் பேரூராட்சி தலைமை எழுத்தர் வினோபா , இளநிலை உதவியாளர் ரமேஷ் மற்றும் பணியாளா்கள் கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளாக முகக்கவசம் அணிவது கட்டாயம், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கைகளை தூய்மையாக வைத்திருத்தல், கடைக்காரா்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்தல், அபராதம் விதித்தல், முகக்கவசம் வழங்குதல் மற்றும் நகரப்பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளித்தல், துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல், கூட்டமாகக் கூடுவதை தவிா்த்தல், திருமண மண்டபங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களை கண்காணித்தல், உணவகங்கள், கடைகளை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனா். மாா்க்கெட், உழவர் சந்தை மற்றும் மக்கள் கூட்டம் அதிகமாக கூடும் இடம் மற்றும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் வாகனம் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகின்றது.செங்கம் சுற்றுவட்டார பகுதியில் வேகமாக பரவி வரும் கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்புப் பணிகளை சுகாதாரப் பணிகள் மருத்துவ அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். வேகமாக பரவி வரும் கரோனா தொற்று காரணமாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..