தனது காதல் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கர்ப்பிணி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு ஒன்றியம் மேல் கரிப்பூர் பகுதியை சேர்ந்த 7 மாதம் கர்ப்பிணியான சுந்தரி தனது கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி செங்கம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது காதல் கணவர் சிலம்பரசனுடன் சேர்த்து வைக்க கோரி வெயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம் மேல்முடியனூர் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் மற்றும் மேல் கரிப்பூர் பகுதியை சேர்ந்த சுந்தரி ஆகி இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர் இவர்களது காதலுக்கு சிலம்பரசனின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சுமார் 11 மாதங்களுக்கு முன்பு சென்னை ஊரப்பாக்கம் மாரியம்மன் ஆலயத்தில் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர் அதன் பிறகு இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு சிலம்பரசனின் பெற்றோர்கள் தனது உறவினருடன் வந்து சிலம்பரசன் கட்டாயப்படுத்தி மிரட்டி அழைத்து சென்றுள்ளனர்.இதனைத் தொடர்ந்து என்ன செய்வதென தெரியாத இருந்து வந்த சுந்தரி சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு அதன் பிறகு செங்கத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் அடிப்படையில் சிலம்பரசன் அழைத்து விசாரணை செய்து வந்த மகளிர் காவல்துறையினர் இருவரையும் நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது தனக்கு சுந்தரியுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என போலீசாரிடம் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.தனது காதல் கணவனின் பெற்றோர்கள் தனது கணவனை மிரட்டி அழைத்துச் சென்றதாக கூறிய சுந்தரி அதிர்ச்சி அடைந்தார் தற்போது சுந்தரி 7மாத கர்ப்பிணியாக உள்ளார் இவர் கடந்த மூன்று மாதங்களாக தனது சகோதரி வீட்டில் தங்கி உள்ளார். தனது கணவர் குடும்பத்தினர் அவரை என்னோடு சேர்ந்து வாழ விடாமல் மிரட்டி வீட்டுக்காவலில் வைத்திருப்பதாகவும் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருவதாகவும் தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரியும் காவல் நிலையங்களில் புகார் கொடுத்தும் எவ்வித பலனும் இல்லாததால் மனமுடைந்த சுந்தரி செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெயிலில் அமர்ந்து தருணா போராட்டத்தில் ஈடுபட்டார்.தகவலறிந்து வந்த செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக காவலர்கள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்ததை அடுத்து சுந்தரி தர்ணா போராட்டத்தை கைவிட்டார் கணவனுடன் சேர்த்து வைக்கக்கோரி 7 மாத கர்ப்பிணி பெண் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது

புனித ரமலான் வாழ்த்துக்கள்..