பெண்களிள் ஓட்டு அதிகமாக பதிவாகிருப்பதால் மீண்டும் தமிழகத்தில் அதிமுக – பாஜக ஆட்சி – எல்.முருகன்

பெண்களிள் ஓட்டு அதிகமாக பதிவாகிருப்பதால் மீண்டும் தமிழகத்தில் அதிமுக – பாஜக ஆட்சி அமையும் என மதுரை விமானநிலையத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி.விடுதலை சிறுத்தைக.ள் கட்சியினர் அதிகளவில் பாஜகவில் இணைவதினால் அதனை பொறுத்துக்கொள்ள முடியாத விடுதலை சிறுத்தையினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும்,டாக்டர். அம்பேத்கர் உலக தலைவர் எனவும் அவரை ஒரு ஜாதிய வட்டாரதிற்குள் அடைக்கக்கூடாது எனவும் கூறினார்..!கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் போதிய ஆக்ஸிஜன் மற்றும் படுக்கை வசதிகள் இல்லாத நிலையில், பிரதமரின் நிவாரண நிதி எங்கே என்ற ராகுல் காந்தி கேள்விக்கு ராகுல்காந்திக்கு கேள்வி கேட்பதை தவிர்த்து வேறென்ன தெரியும் என கேள்வி எழுப்பிய முருகன், எதிர்க்கட்சி தலைவர் அரசாங்கத்திற்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டுமே தவிர கேள்விகள் மட்டும் கேட்க கூடாது என விமர்சனம் செய்தார்.!தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என கேள்விக்கு இந்த சட்டமன்ற தேர்தலில் பெண்களில் ஓட்டு அதிகளவில் பதிவாகியிருப்பதாகவும், பொதுவாக பெண்களின் வாக்கு வங்கி அதிமுகவிற்கு சாதகமாக இருக்கும் என்றும், எனவே இந்த தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கூறினார்…!!

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image