அரசு வங்கியில் ஏற்பட்ட தீ விபத்து விரைந்து செயல்பட்டு அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு .

மதுரை மேலமாசி வீதி டி.எஸ்.பி. டவர் செயல்பட்டு வரும் பேங்க் ஆப் பரோடா வங்கி நள்ளிரவு 12.30 மணி அளவில் தீ பிடித்ததாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வந்தது இதனை அடுத்து தீயணைப்பு இரண்டு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த அனுப்பானடி நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மின் இணைப்பை துண்டித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் இந்த தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த ஏ சி மற்றும் கம்ப்யூட்டர் இன்வெர்ட்டர்கள் எரிந்து முற்றிலும் நாசம் ஆனது விபத்துக்கான காரணம் குறித்து திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image