வேளாண்மை கல்லூரி மாணவிகள் பஞ்சகாவியம் குறித்து செயல்விளக்க பயிற்சி அளித்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொட்டுலுப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு தங்கல் திட்டத்தின் கீழ் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள்   ஒன்றினைந்து கிராமத்தில் உள்ள மக்களை நேரடியாக சந்தித்து விவசாய பணிகள் குறித்து கேட்டறிந்தனர். அதனைதொடர்ந்து நெற்பயிர்களில் ஏற்படும் நோயை கட்டுபடுத்தும் வழிமுறைகள், அதற்கு எந்தெந்த பூச்சிமருந்து தெளிப்பது உள்ளிட்டவைகளை மாணவிகள் மக்களிடம் விளக்கமளித்தனர். மேலும் பஞ்சகாவியமான பசுஞ்சாணம் , கோமியம் , பசுநெய் , பசுந்தயிர் , வெள்ளம் இளநீர் ஆகியவற்றை பயிர்களில் தெளித்து பல்வேறு நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து செயல்விளக்க பயிற்சியும் வழங்கினர். இதில் கிராமமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

உசிலைசிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..