செங்கத்தில் அனைத்து கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை .

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அவர்களது 130 ஆவது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் செங்கம் அதிமுக மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மகரிஷி மனோகரன் தலைமையில் செங்கம் சட்டமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளர் எம் எஸ் நைனாகண்ணு ஆகியோர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதேபோன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் செங்கம் நகர கழக செயலாளர் சங்கி என்கின்ற சிவசங்கர் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இதனை தொடர்ந்து பாஜக கம்யூனிஸ்ட் தமிழ் மாநில காங்கிரஸ் இந்திய குடியுரிமை கட்சி என பல்வேறு கட்சிகள் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் நகர கழக செயலாளர் ஆனந்தன் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் பத்மாமுனிக்கண்ணு தலைமை கழக பேச்சாளர் வெங்கட்ராமன் டிஎஸ்வேலு கே கே மணி வழக்கறிஞர் தினகரன் தோக்கவாடி 6வது வார்டு செயலாளர் பியர்லஸ் குப்புசாமி தோக்கவாடி சசிகுமார் பட்டறை சங்கர் பூக்கடை ஜெகன் நாச்சிபட்டு கோபி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான எ.வ.வேலு டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் திமுக மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், செங்கம் தொகுதி திமுக வேட்பாளர் மு.பெ.கிரி பங்கேற்று மரியாதை செலுத்தினார். ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ., நகர செயலாளர் சாதிக் பாஷா மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார் ,சகுந்தலா ராமஜெயம், கூட்டுறவு சங்க தலைவர் முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image