செங்கத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு .

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் திருக்கோயிலில் சித்திரை மாதப்பிறப்பு மற்றும் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு மூலவருக்கும் மற்றும் உற்சவர் களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது மற்றும் தீபாராதனையும் சிறப்பாக நடைபெற்றன. கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றப்பட்டது. இதேபோன்று அருள்மிகு ஸ்ரீ அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் திருக்கோவில் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு வழிபாடு மிகப் பெற்றன மாத பிறப்பையொட்டி கோ பூஜை மற்றும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. செங்கம் சுற்றுப்புற பகுதிகளான செங்கம் நகரம் , வளையாம்பட்டு ,காயம்பட்டு, பள்ளிப்பட்டு, மேல் வணக்கம் பாடி என பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி அனைத்து ஆலயங்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது .அனைத்து பக்தர்களும் தனிமனித இடைவெளியை பின்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image