அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள திருவுருவசிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜக கட்சிக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் மோதல் அடிதடி – பரபரப்பு – போலீசார் குவிப்பு

இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் அம்பேத்கர் 131 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.நாடு முழுவதும் உள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள அவருடைய சிலைக்கு இன்று காலை முதல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பாரதிய ஜனதா கட்சியினரை விசிக கட்சியினர் தடுக்கமுயன்றபோது அடிதடி மோதல் ஏற்பட்டது.இதனால் சிறிது நேரம் பரபரப்பு பதட்டம் காணப்பட்டது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image