சிட்கோ தொழிலாளர்களுக்கு இலவச தடுப்பூசி முகாம் .

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தொழிலாளர்களுக்கு இலவச கொரோனா தடுப்பு ஊசி போடும் முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் 45 வயதுக்கு மேற்பட்டோர் ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.இந்த முகாம் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் என்றும் 20,000 பேருக்கும் மேற்பட்டோர் வேலை பார்க்கும் சிட்கோ தொழிற்பேட்டையில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்படும் என்று கப்பலூர் தொழில் அதிபர்கள் சங்க தலைவர் ரகுநாத ராஜா தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மருதப்பன், சிட்கோ மேலாளர் கண்ணன்,மாவட்ட தொழில் மையம் உதவி பொருளாளர் சரவண கணேஷ்,டிஎஸ்பி வினோதினி
கப்பலூர் தொழில் அதிபர்கள் சங்க தலைவர் ரகுநாத ராஜா,
செயலாளர் வாசுதேவன், பொருளாளர் இளங்கீரன் மற்றும்
செக்கானூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image