44 எம்.எல்.ஏ க்களுக்கு 7 அமைச்சர்கள் வேண்டும்:அதிர வைக்கும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் கூட்டமைப்பு.

தமிழ்நாடு ஆதி திராவிடர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் , கருத்து கணிப்புகள் அனைத்தும் திமுகவிற்கு சாதகமாக உள்ளன.எனவே அமையப் போகும் திமுக ஆட்சியில் ஆதி திராவிடர்கள் எனப்படும் பறையர் சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கிட வேண்டும்.44 எம்.எல்.ஏ ககளுக்கு 7 அமைச்சர்கள் வரை பதவிகள் மற்றும் பொறுப்புகள் வழங்கிட வேண்டும்.1 கோடிக்கும் அதிகமான பிரதிநிதிகள் உள்ள எங்கள் சமூகத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் .பட்டியல் இனத்தை விட்டு வெளியேற்றுங்கள் என கோரிக்கை வைப்பவர்களின் கோரிக்கையை ஏற்று அதற்கான இட ஒதுக்கீட்டையும் எங்களுக்கு சேர்த்து வழங்கிட வேண்டும் . அரக்கோணத்தில் நடைபெற்ற இரட்டை படுகொலைகளுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image