மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 700 படுகைகள் தயார் நிலையில் உள்ளது.

தென் மாவட்டத்தில் மிக முக்கியமான மாவட்டமாக உள்ள கூடிய மதுரை மாவட்டத்தில் கொரான வால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கணிசமான அளவு உயர்ந்து கொண்டே இருக்கிறது.குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி சுமார் 1345 பேர் கொரானா தோற்றால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள அரசு இராஜாஜி சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மதுரை மாநகராட்சியில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அந்த பகுதியில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இது மட்டுமில்லாமல் மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியில் மூன்று பேருக்கு மேல் தோற்று பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த பகுதியை தனிமை படுத்தப்பட்ட பகுதியாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறதுமேலும் கொரானவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் கோவிட் சென்டர் திறக்காத திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.இந் நிலையில் சுமார் 700 படுக்கைகள் கொண்ட கொவிட் சென்டர் இன்று முதல் திறக்க உள்ளது.லேசான அறிகுறி உள்ள தோற்று பாதிக்கப்பட்டவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.இதுமட்டுமல்லாமல் இங்கு நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை உணவு வழங்க மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறையின் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.மேலும் மாவட்டம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருகிறது.தொற்று பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் பள்ளி கல்லூரிகளில் கூடுதல் படுக்கையிலே கொண்ட கோவிட் சென்டர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image