கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் ஐஏஎஸ் பேட்டி.

மதுரையில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதி தீவிரமடைவதை தொடர்ந்து கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் ஐஏஎஸ் பேட்டி.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன், அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் சங்குமணி உள்ளிட்ட அரசுஸதுறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சந்திரமோகன் :மதுரையில் இரண்டாம் கட்ட கொரோனா அலை காரணமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின்எண்ணிக்கை அதிகரித்துவருகிறது, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதிலும் காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகிறோம் இரண்டாம் கொரோனா அலையால் குறைந்த காலத்தில் நோயாளிகளின் பாதிப்பு அதிகரிக்கிறது, புதிய மரபணு மாற்ற வழிமுறைகளின் தொற்று அதிகரிக்கிறதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதற்கான தீர்வு முக கவசம், சமூக இடைவெளி தான் எனவும், மாவட்டத்தில் முக கவசம், சமூக இடைவெளி பின்பற்றாத நபர்களிடம் இருந்து மதுரையில் கடந்த 11நாளில் 8லட்சத்தி 75ஆயிரத்தி 600ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது,்அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், வீட்டில் இருந்து வெளியில் வரும்போது முக கவசம் கட்டாயம், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை வழங்க 2ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது, கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பது குறித்து புனே ஆய்வுமையத்தில் ஆய்வுகளுக்காக அனுப்பிவைத்துள்ளோம், 45வயதிற்கு மேற்பட்டவர்கள் மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திகொள்ளலாம்என்றார்பேட்டிதிரு.சந்திரமோகன்மாவட்ட கொரோனா கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image