7
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சின்ன மாயாகுளம் கிராமத்தில் உள்ள சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர் விடுதலை சேகரன் தலைமையில் முதுகுளத்தூர் தொகுதி பொறுப்பாளர் யோசபு திருவடனை தொகுதி பொறுப்பாளர் பழனிக்குமார் முன்னிலையிலும் சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியின் ராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ், பஞ்சநாதன், ஷாஜகான் உள்ளிட்ட பல விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.