Home செய்திகள் மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு நிலையமாக தரமுயர்த்தக் கோரிய வழக்கு.

மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு நிலையமாக தரமுயர்த்தக் கோரிய வழக்கு.

by mohan

அரசிமதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிப்பு செய்து , மேம்படுத்த வேண்டும் என உத்தரவிட கோரிய பொது நல மனு மீதான விசாரணையில் மத்திய விமான போக்குவரத்து துறை பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ர ல் கடைசி வாரம் ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது. . தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அரசிடம் வலியுறுத்தலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்சுற்றுலா முகவர்கள் சங்கத்தின் தலைவர் சதீஷ்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு :2011 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் மூன்றாவது பெரும் நகரமாக மதுரை வளர்ச்சி பெற்று வருகிறது. இந்தியா அளவில் 44 வது இடத்தில் வளர்ச்சி பெற்ற நகரமாக வளர்ந்து வருகிறது .மதுரையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உள்ளது எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.எய்ம்ஸ் மருத்துவமனையால் தமிழ்நாடு , கர்நாடகா மக்களுக்கும் பயண் பெற உள்ளனர். மிகவும் பழமையான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது.மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரை ராமநாதபுரம் தேனி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் பயன்படுத்தாமல் ஒரு விமான நிலையமாக மதுரை விமான நிலையம் உள்ளது.மதுரை விமான நிலையம் 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது . 2012 ஆம் ஆண்டு அவர் உள்நாட்டு விமான நிலையமாக செயல்பட்டு வந்தது. அதன் பிறகு குறிப்பிட்ட சில வெளிநாட்டுக்கு விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையமாக செயல்பட்டு வருகிறது . மதுரை விமான நிலையத்தில் தற்போது இரண்டு முனையங்கள் உள்ளது.தற்போது 17,500 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து சிங்கப்பூர், இலங்கை துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் சென்று வருகின்றன . மேலும் பல வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்கள் அந்நாட்டில் இருந்து மதுரைக்கு விமான சேவை இயக்க தயாராக உள்ளன விண்ணப்பித்துள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையமாக மதுரை விமான நிலையம் உள்ளது .பழைய முனையும் தற்போது சரக்கு போக்குவரத்தை கையாளும் முனையமாக செயல்பட்டு வருகிறது. நாட்டில் அதிக பயணிகள் வந்து செல்லும் விமாற நிலைய த்தில் 36 இடத்தில் உள்ளது. மேலும் இந்த விமான நிலையம் ISO 9001 -2015 சான்றிதழ் பெற்றுள்ளது . மதுரையை விட சிறிய விமான நிலையமாக உள்ள உத்திரப்பிரதேசத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையம் மற்றும் திருப்பதி விமான நிலையங்கள் போன்றவை பன்னாட்டு விமான நிலையங்கள் அங்கீகரிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளதுமதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிப்பு செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தில் MP க்கள் குரல் எழுப்பியும் எந்த பயனும் இல்லை.எனவே, மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிப்பு செய்து , மேம்படுத்த வேண்டும் என உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறி உள்ளார் இந்த பொது நல மனு நீதிபதிகள் சிவஞானம், மற்றும் S. ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது. . தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அரசிடம் வலியுறுத்தலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துமத்திய விமான போக்குவரத்து துறை பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ர ல் கடைசி வாரம் ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.ன் கொள்கை முடிவில் தலையிட முடியாது : உயர்நீதி மன்றம்….

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!