ஓட்டு போட வந்த ஓய்வு பெற்ற மின் பொறியாளர் வாகனம் மோதி பலி.

மதுரை ஆனையூர் சேர்ந்த ஓய்வுபெற்ற மின் பொறியாளர் காமராஜர் வயது 72 இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்தார் இந்த நிலையில் நடைபெற்று சட்டசபை தேர்தலுக்கு ஓட்டு போடுவதற்காக நேற்று மதியம் 1/30 மணி அளவில் தனியார் பேருந்து மூலமாக புறப்பட்டு மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் அருகே உள்ள தனியார் ஆம்னி பேருந்து நிறுத்தத்தில் இருந்து நேற்று இரவு 10 மணி அளவில் வந்து இறங்கினார் உணவு அருந்துவதற்காக சாலையை கடக்க முற்பட்டபோது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது பலமாக மோதியது இதில் பலத்த காயமடைந்த காமராஜர் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டி இருவரும் மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இதில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 3 மணி அளவில் காமராஜர் உயிரிழந்தார் உடல்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து சம்பவம் குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஓட்டு போடுவதற்காக சென்னையில் இருந்து மதுரை வந்த ஓய்வு பெற்ற மின் பொறியாளர் பலியானது குடும்பத்தினர் சோகத்தை ஏற்படுத்தியது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image