உசிலம்பட்டி கீழப்புதூரில் திமுக கூட்டணி வேட்பாளர் கதிரவன் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குபதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உசிலம்பட்டி கீழப்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள வாக்குசாவடி மையத்தில் வாக்கு பதிவு நடைபெற்று வரும் நிலையில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் பிவி கதிரவன் தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்குசாவடி மையத்திற்குள் சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்தி நிறுத்தி அனுமதியில்லை என கூறினர்.ஆனால் மற்ற கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் சென்று பார்வையிட்டார்கள் அவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கினீர்கள், எங்களுக்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என கூறி வேட்பாளருக்கும், காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதனைதொடர்ந்து வேட்பாளர் மற்றும் நிர்வாகிகள் பாதியிலேயே புறப்பட்டனர்.

உசிலை சிந்தனியா

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image