Home செய்திகள் குடகனாறு ஆற்றின் நீரினை  முறையாக நிலக்கோட்டை பகுதியில் உள்ள கண்மாய்களை நிரப்பப்படும் அ.தி.மு.க வேட்பாளர் வாக்குறுதி.

குடகனாறு ஆற்றின் நீரினை  முறையாக நிலக்கோட்டை பகுதியில் உள்ள கண்மாய்களை நிரப்பப்படும் அ.தி.மு.க வேட்பாளர் வாக்குறுதி.

by mohan

நிலக்கோட்டை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் எஸ். தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ நிலக்கோட்டை தொகுதியில் உள்ள என்.கோயில்பட்டி, ராஜதானிகோட்டை ,ராமராஜபுரம், வத்தலகுண்டு, அணைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்தார் . அப்போது அவர் பேசியதாவது: நிலக்கோட்டை தாலுகாவிலுள்ள செங்கட்டாம்பட்டி, சீத்தாபுரம் பாப்பன்குளம் கண்மாய் குளத்துப்பட்டி பெரியகுளம் கண்மாய், கொங்கர்குளம் கண்மாய், சிலுக்குவார்பட்டி கண்மாய் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களுக்கு குடகனாறு ஆற்றின் ஒரு பகுதியான ராஜ வாய்க்கால் மூலமாக ஆண்டுதோறும் மழை பெய்யும் நேரத்தில் தண்ணீர் கிடைக்கும்.இந்த ராஜவாய்க்கால் நன்றாக தூர்வாரபட்டதால் தான் செங்கட்டாம்பட்டி கண்மாயும், சீத்தாபுரம் பாப்பன்குளம் கண்மாய், கொங்கர்குளம் கண்மாய், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிரம்பி வழிந்தது. இதுபோன்று வருடம்தோறும் அனைத்துக் கண்மாய்களை நிரப்ப தொடர்ந்து முழுமூச்சாக பாடுபடுவோம். அணைப்பட்டி பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளதால் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் வருகை புரியும் காரணங்களால் அணைப்பட்டியில் நவீன முறையில் பஸ் நிலையம் உருவாக்கப்படும். நமது தொகுதியை பொறுத்தவரை விவசாயம் சார்ந்த தொழில்களை கொண்ட பகுதியாக இருப்பதால் விவசாயத்திற்குத் தேவையான விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை இலவச மின்சாரமும், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு ரூபாய் 2500, கல்லூரி மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி, விவசாயம் சார்ந்த தொழில்களான விலையில்லா ஆடுகள் , கறவை மாடுகள் கால்நடைகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை வழங்கிய அரசு அதிமுக அரசுதான். நான் உங்க ஊர்க்காரி, உங்களுக்கு எந்த நேரம் எது வேணாலும் பக்கத்துல இருக்கேன்  நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளலாம். பொது மக்கள், விவசாயிகள், சகோதர, சகோதரிகள் அனைவரும் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் எனக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் இவ்வாறு அவர் பேசினார். பிரச்சாரத்தில் நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் நகர செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர், நூத்துலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், எஸ். தும்மலபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சக்திவேல், உட்பட அ.தி. மு.க. வினர்,  அ.தி.மு.க கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.படவிளக்கம் : நிலக்கோட்டை அருகே என்.கோவில்பட்டியில் அ.தி.மு.க.வேட்பாளர் எஸ்.தேன்மொழி சேகர்  இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தபோது எடுத்தபடம்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!