Home செய்திகள் பதவியில் இருக்கவும், வழக்குகளும் இல்லாமல் இருப்பதற்காக அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. – ஹார்விப்பட்டியில் திமுக எம்பி கனிமொழி பிரச்சாரம்.

பதவியில் இருக்கவும், வழக்குகளும் இல்லாமல் இருப்பதற்காக அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. – ஹார்விப்பட்டியில் திமுக எம்பி கனிமொழி பிரச்சாரம்.

by mohan

திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் எஸ்.கே.பொன்னுத்தாயி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து திமுக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது பொதுமக்களிடம் அவர் கூறுகையில்:ராஜன் செல்லப்பா மேயராக இருந்தபோது மக்களுக்கு எதுவும் செய்யவில்லை வடக்குத் தொகுதியில் இருந்த போதும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை இங்கே வென்றாலும் எதுவும் செய்ய மாட்டார். சட்டமன்றத்திலே உங்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒருவரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் அப்படிப்பட்ட வேட்பாளர் பொன்னுத்தாயி என்பதை உணர்ந்து இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.பாராளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணியை ஸ்டாலின் உருவாக்கி இருந்தார்கள், இந்த கூட்டணி என்பது கொள்கைக்காக இருக்கக் கூடிய கூட்டம் இந்த கூட்டணி என்பது தற்போது அதிமுக பிஜேபி யை போல தேர்தலுக்கு தேர்தல் மாறக்கூடிய கூட்டணி அல்ல. பாமக அந்த கூட்டணியில் தான் உள்ளது உடன் இருக்கக்கூடிய ஒரு கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக முதல்வரை பற்றி பேசுகிறார். ஒரு வார்டு கவுன்சிலராக இருக்க கூட தகுதி இல்லாத ஒருத்தர் இன்று தமிழகத்தின் முதல்வராக இருக்கிறார் என்று சொன்னார். அதற்கு மேல் அவர், கூறியதை என் வாயால் நான் சொல்ல தயாராக இல்லை. இந்த அளவுக்கு முதலமைச்சர் மீது மரியாதை வைத்திருக்கிறார் அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்.பதவியில் இருக்க வேண்டும் எந்த வழக்குகளும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பாஜகவுடன் கூட்டணி வைத்து உள்ளார்கள். வேளாண் திட்டங்களை அதிமுக ஆதரித்தது, குடியுரிமை சட்டத்தை ஆதரித்தது. ஆனால் தற்போது தேர்தல் வந்ததால் எந்த சட்டத்தை ஆதரித்து ஓட்டு போட்டார்களோ இன்று அந்த சட்டங்களை ரத்து செய்துள்ளது. பாஜக ஆதரிக்கின்ற சட்டத்தை தற்போது அதிமுக தேர்தல் காரணமாக மக்களுக்கு எதிரான சட்டங்கள் என்று அதை எதிர்க்கின்றனர். இதன் மூலம் அதிமுக பாஜக கூட்டணி பற்றி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.பாஜக கூட்டணியாள் தான் தமிழகத்திற்கு என்னால் நல்லது செய்ய முடிந்தது என்றார் தமிழக முதல்வர். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மதுரையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் ஆனால் இதுவரை கட்டி முடிக்கப்படவில்லை. அத்துடன் தொடங்கப்பட்ட அனைத்து மருத்துவ மனைகளும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்டுள்ளது.அதிமுகவின் அமைச்சர்கள் அனைவர் மீதும் ஊழல் வழக்குகள் உள்ளது அந்த வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக பாஜக உடனான கூட்டணி வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் உரிமைகளை சமூகநீதியை தமிழர்களின் எதிர்காலத்தை டெல்லியில் அடகு வைத்துள்ள கூட்டணிதான் அதிமுக பாஜக கூட்டணி. தமிழ்நாட்டை விட்டு கொடுத்ததுதான் அதிமுகவின் மகத்தான சாதனை. பெண்கள் பாதி நாட்கள் குடிதண்ணீர் இல்லாமல் இருக்கிறார்கள் ரேஷன் கடையில் எந்தவித பலனும் கிடைப்பதில்லை பெண்கள் உட்பட இந்த அரசாங்கத்தை எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் மிரட்டப்படுகிறார்கள் கொலை செய்யப்படுகிறார்கள் ஆனால் தமிழகம் வெற்றி நடைபோடுகிறது என்கின்றனர்.உரிமைக்காக போராடிய 13 பேரை சுட்டுக் கொன்றனர். வாங்கத்தான் கட்டமைக்கப்பட்ட வன்முறை தமிழகத்தை தவிர வேறு எங்கும் நடந்ததில்லை. பொள்ளாச்சியில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் ஒரு பெண் மட்டும் தைரியமாக புகார் அளித்தால் அவருடைய அண்ணனையும் அடித்து நொறுக்கி விட்டனர். ஒரு பெண் காவலர் தன்னுடைய உயர் அதிகாரி தன் மீது பாலியல் வன்கொடுமை செய்தார் என்று புகார் அளிக்க வந்தபோது அவரையும் மிரட்டி அனுப்பினர். விவசாயத்திற்காக போராடிய விவசாயிகளையும் காவல்துறை மூலம் அடித்து விரட்டினர்.நீட் தேர்வு மூலம் நம் பிள்ளைகள் அரசாங்க வேலைக்கும் டாக்டர் படிப்பு படிக்க முடியாமல் ஆகிவிட்டது. 1 லட்சத்து 50 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும். விவசாய தடை மறுபடியும் ரத்து செய்யப்படும் கலைஞர் 7000 கோடி ரத்து செய்யப்பட்டு செய்ததைப் போல ரத்து செய்யப்படும் 5 சவரனுக்கு கீழாக உள்ள நகைக் கடன் ரத்து செய்யப்படும். கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு மானியத்தில் கிடைக்கும் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் ரேஷன் கடைகளில் பொருள் நியாயமாக ஒழுங்கான அளவு தரமான பொருட்கள் அளிக்கப்படும். பால் விலை குறைக்கப்படும் 100 நாள் வேலை 150 நாள் ஆக உயர்த்தி தரப்படும் 200 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தப்படும். முதியோர் ஓய்வூதியத் தொகை ஆயிரத்திலிருந்து 1500 ஆக உயர்த்தி தரப்படும். கல்வி கடன் ரத்து செய்யப்படும்.உயர்நிலைப் படிப்பு மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் டேப்ளெட் இலவசமாக வழங்கப்படும். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகில் உள்ள தொழில் பூங்கா மீண்டும் துவங்கப்படும்.திருப்பரங்குன்றம் பகுதியில் கண்மாய் தூர்வாரப்பட்டு சுரங்கப்பாதை அமைக்கப்படும்.திருப்பரங்குன்றம் அவனியாபுரம் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கப்படும். கொரோனா நேரத்தில் மக்களுக்கு நிதி வழங்க கோரியது 5000 ரூபாய் ஆனால் ஆயிரம் ரூபாய் தான் கொடுக்கப்பட்டது மீதி 4 ஆயிரம் ரூபாய் கலைஞரின் பிறந்த நாளன்று உங்களுக்கு வழங்கப்படும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!