செங்கத்தில் விடுபட்ட ஆசிரியர்களுக்கு முதல்கட்ட தேர்தல் வகுப்பு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெறும் எனவும் அதற்கான வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை, தேர்தல் வேட்பாளர் மனு தாக்கல் செய்வது என அரசியல் களம் தீவிரமடைந்துள்ளது .மேலும் அரசு ஊழியர்கள், அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தனித்தொகுதியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு 4 கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகளில் முதல்கட்ட பயிற்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் தனித்துணை ஆட்சியர் தேர்தல் அலுவலருமான வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது முதல் கட்ட தேர்தல் வகுப்பில் விடுபட்ட ஆசிரியர்களுக்கான தேர்தல் வகுப்பு நடைபெற்றது. உதவி தேர்தல் அலுவலர் வட்டாட்சியர் மனோகரன், மலர்க்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு குறித்தும் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். மண்டல துணை வட்டாட்சியர் மோகன ராம், கிராம நிர்வாக அலுவலர் சந்திரகுமார், ஆனந்தன் பள்ளி துணை ஆய்வாளர் குணசேகரன், வட்டார கல்வி அலுவலர்கள் மகேஸ்வரி , கோவிந்தராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..