இராஜபாளையம் நடிகை கௌதமி வேட்பாளர் என தமிழக BJP தேர்தல் இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேச்சால் கூட்டணி கட்சியினர் குழப்பம்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி மேலிடத் தேர்தல் இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் பாஜக வின் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.முன்னதாக மலர்மாலை அணிவித்து பாஜக இராஜபாளையம் சட்டமன்ற பொறுப்பாளர் கெளதமி வரவேற்றார். உடன் பாஜக நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் முன்னதாக தொண்டர்கள் மத்தியில் தேர்தல் பணிகள் குறித்து பேசிய நடிகை கெளதமி நான் கேள்வி கேட்கும் போது பதில் தெரியவில்லை என்றால் சிரிப்பின் மறுமுகம் பார்கலாம் என பேசினார்.இதனை தொடர்ந்து பேசிய, சுதாகர் ரெட்டி இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பிஜேபி சார்பில் போட்டியிடும் நடிகை கௌதமி வெற்றிபெறச் செய்ய வாழ்த்துக்கள், அனைவரும் பாடுபட வேண்டும் என பேசினார். தேர்தல் அறிவித்த நிலையில் கூட்டணிக் கட்சிகளிடையே இடப்பங்கீடு செய்யாத நிலையில் வேட்பாளர் என அறிவித்து பேசியது கூட்டணி கட்சியினர் இடையே சலசலப்பு ஏற்பட்டது.பின் செய்தியாளர் சந்திப்பின் போது வேட்பாளர் குறித்த கேள்விக்கு,பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேட்பாளராக நடிகை கெளதமி நாங்கள் முடிவு எடுத்துள்ளோம். கூட்டணி கட்சிகளுடன் முறையான விதிமுறைகளை அனுசரித்து பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எந்த நிலைபாட்டிலும் வெளியாகலாம் என கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..