992 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பேட்டி.

2021 சட்டமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் அன்பழகன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உதவி தேர்தல் அலுவலர்கள், காவல்துறையினர், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.பின்னர் மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான அன்பழகன் செய்தியாளர் பேட்டியளித்தார்,மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் ஒவ்வொரு தொகுதிக்கு தலா 3 பறக்கும் படை, தலா 3 வீடியோ காட்சிப்பதிவு குழு,தலா 3 நிலைக்குழு என ஒவ்வொரு தொகுதிகளுக்கும் தலா 9 குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்மதுரை மாவட்டத்தில் 21 இடங்கள் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளதுமாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்தேர்தல் புகார் குறித்து 1950 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் வேட்பாளர்களின் செலவு கணக்கு கணக்கிடப்பட்டு கணக்கில் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுமதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 3856 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் 992 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாககண்டறியப்பட்டுள்ளதுவாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் கொரோனோ பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்வங்கிகளுக்கு கொண்டு செல்லும் பணத்திற்கான ஆவணங்களை காண்பித்தால் வங்கி பணம் பறிமுதல் செய்யப்படாது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..