சாலை விபத்தில் மூளைசாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்.இதயம் , நுரையீரல் விமானம் மூலம் சென்னை சென்றது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள பனசம்மா கோட்டையைச் சேர்ந்தவர் ஐயப்பன் இவரது மனைவி முத்துச்செல்வி இவர்களுக்கு தமிழ்மணி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர் .இதில் தமிழ்மணி (வயது 21) பிஎஸ்சி கேட்டரிங் படித்துள்ளார். வேலைக்காக வெளி நாடு செல்ல தயராகி வருகிறார்,மேலும் பல வருடங்களாக ரத்த தானம் மற்றும் சமூகப் பணியில் ஆர்வமாக இருந்துள்ளார் .கடந்த 22ஆம் தேதி உறவினர்களின் திரும்பிச் செல்வதற்காக காரில் சென்றபோது மானகிரி பைபாஸ் சாலையில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் தமிழ்மணிக்கு தலைக்காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 23ஆம் தேதி மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் மேல் சிகிட்சைகாக அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு 25ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தார்.இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் குடும்பத்துடன் ஆலோசனை செய்த போது குடும்பத்தினர் தமிழ்மணியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.அவரது இதயம் மண்ணீரல் கல்லீரல் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்தனர் இதில் இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.கல்லீரல் , மண்ணீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் வேலம்மாள் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது.தமிழ்மணி மறைந்தாலும் அவரது உடல் உறுப்புகள் பலரை வாழ வைப்பது பெரிதும் சந்தோஷமாக உள்ளது என தமிழ்மணியின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..