காட்பாடியில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா.

காட்பாடியில் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு வேலூர் மாநகராட்சி 6-வது வட்ட அதிமுக செயலாளர் கே.ஆர்.ரவி தலைமை தாங்கினார்.வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் அப்பு கலந்துகொண்டார் முன்னாள் நகர செயலாளர் கே.ஆர்.பாபு பகுதி இணை செயலாளர் லட்சுமி ரவி, பகுதி செயலாளர் ஜனார்த்தனன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.காந்திநகர் டிகேஎம் மண்டபம் அருகில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் ஒட்டி புடவை, வேட்டி, அரிசி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.அதேப்போல் மேற்கு பகுதி அதிமுக செயலாளர் நாராயணன் மற்றும் முன்னாள் மாநகராட்சி சுகாதார குழு தலைவர் கே.பி.ரமேஷ் ஏற்பாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு இலவசமாக டிரைவிங் லைசன்ஸ் மற்றும் ஹெல்மெட் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அப்பு மாநிலமாணவரணி துணை செயலாளர் எம்.டி.பாபு, காட்பாடி ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image