மாற்றுத்திறனாளிக்கு உதவிய வள்ளியூர் காவல் ஆய்வாளர்; பொதுமக்கள் பாராட்டு..

நெல்லையில் மாற்றுத்திறனாளிக்கு உதவிய வள்ளியூர் காவல் ஆய்வாளரின் மனிதநேயமிக்க செயலை பொதுமக்கள் சமூக வலை தளங்களில் பாராட்டி வருகின்றனர்.திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி வள்ளியூர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது முதல்வரிடம் மாற்றுத்திறனாளி ஒருவர் கோரிக்கை மனு வழங்குவதற்காக சாலையின் ஓரம் நின்று மனுவை கொடுக்க முயன்றார். முதல்வர் அவரை பார்த்து கை அசைத்து வாங்க முற்பட்ட போது மாற்றுத்திறனாளியான அவரால் செல்ல முடியவில்லை. இந்நிலையில் உடனடியாக அருகிலிருந்த வள்ளியூர் ஆய்வாளர் முருகன் அவரிடம் மனுவை பெற்று வேகமாக முதல்வர் வாகனத்தில் பயணித்த முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி மூலம் சமர்ப்பித்தார். முதல்வர் பாதுகாப்பு பணியின் போதும் மாற்றுத்திறனாளிக்கு உதவும் எண்ணம் கொண்ட காவல் ஆய்வாளரின் மனித நேயமிக்க செயலை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

———RAMADAN KAREEM————..

———RAMADAN KAREEM————..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image