மதுரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்.. “ மூன்றாவது அணி அமையுமா என்ற கேள்விக்கு.. சாத்தியமே… ஆனால் எப்போது சாத்தியம் என்பதை இப்போது பெறமுடியாது”.. அவருக்கே உரிய பாணியில் பதில்..

மதுரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தன்னைடைய தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார்.  அப்பொழுது அவரிடம் பல்வேறு அரசியல் கேள்விகள் எழுப்பப்பட்டது, அதற்கு அவருக்கே உரிய பாணியில் பதில்களை கூறினார். அதன் விபரங்கள் கீழே:-

– மூன்றாவது அணி அமையுமா என்ற கேள்விக்கு.. சாத்தியமே… ஆனால் எப்போது சாத்தியம் என்பதை இப்போது பெறமுடியாது என்றார்.

எங்களுக்கு எந்த வித தயக்கம் இல்லை நாங்கள் போவது சிலருக்கு குத்தலாக இருக்கும் அவர்கள் தான் எங்களுக்கு தடை விதிப்பார்கள் என்றார் கமல்ஹாசன்.

வருகிற 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக *சீரமைப்போம் தமிழகத்தை* என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தனது முதலாம் கட்ட பிரச்சாரத்தை மதுரை மற்றும் நெல்லை மண்டலங்களில் இன்று 13 முதல் டிசம்பர் 16 வரை மேற்கொண்டடுள்ளார்.

இன்று (13/12/2020) கமல் ஹாசன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்திப்பில் கூறியதாவது;

தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி குறித்த கேள்விக்கு ? “காவல்துறையினரால் கடைசி நேரத்தில் தடை விதித்துள்ளனர், எங்களுக்கு தடைகள் புதிது இல்லை. தடைகள் குறித்து அனுபவம் இருக்கிறது, அதற்கான ஒத்திகையும் பார்த்து விட்டோம். பதற்றமின்றி மக்களை சென்று சேர்வோம்.”

புதிய நாடாளுமன்ற கட்டிடம் எதற்கு என்று டுவிட் செய்தது மோடிக்கு ட்வீட் செய்யவில்லை என்ற கேள்விக்கு.? “தற்போது செய்து விடலாம்” என்றார்.

கடந்த முறை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது சர்ச்சையான கருத்தால் பிரச்சாரம் தடைபட்டது குறித்த கேள்விக்கு; “கருத்து யாருக்கு குத்தலாக இருக்குமோ அவர்கள் தடைகளை செய்வார்கள், அதனை மீறியும் பிரச்சாரம் தொடரும்.”

மக்கள் நீதி மய்ய மற்றும் ஆன்மீக அரசியல் ஒன்று சேருமா என்ற கேள்விக்கு;  “கட்சிகள் பிளவு பெற வாய்ப்பும் உள்ளது, கூடவும் உள்ளது அதனை மட்டும் கூற இயலும்.”

மூன்றாவது அணி அமையுமா என்ற கேள்விக்கு; “சாத்தியமே… ஆனால் எப்போது சாத்தியம் என்பதை இப்போது பெறமுடியாது” என்று கமல் ஹாசன் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..