உசிலம்பட்டி அருகே இரண்டு ஆண்டுகளாக குடிநீர் வசதி செய்து தராததை கண்டித்து காலி குடங்களை வைத்து கிராம மக்கள் சாலை மறியல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மேலச்செம்பட்டி காலணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சரிவர குடிநீர் கிடைக்கவில்லை என அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குடிநீர் கேட்டு கிராம மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் மனு அளித்தும், கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அந்தபகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் காலி குடங்களையும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த சிந்துபட்டி தாலுகா காவல் நிலைய போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைதொடர்ந்து அந்த பகுதி ஊராட்சி மன்ற தலைவர் காசிமாயனும் உடனடியாக தண்ணீர் வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்ததை தொடர்ந்து சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..