Home செய்திகள் சுரண்டை சாம்பவர் வடகரையில் உதயநிதி பிறந்த நாள் விழா;பெண்கள் கோவிலில் வழிபாடு-ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கல்..

சுரண்டை சாம்பவர் வடகரையில் உதயநிதி பிறந்த நாள் விழா;பெண்கள் கோவிலில் வழிபாடு-ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கல்..

by mohan

சுரண்டை சாம்பவர் வடகரை பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது. சுரண்டையில் பெண்கள் கோவிலில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். சாம்பவர் வடகரையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சுரண்டை சீனிவாசபெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நகர செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார்.தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலந்துகொண்டு உதயநிதி ஸ்டாலின் நீடுழி வாழ அவரது பெயரில் அர்ச்சனை செய்தார். அப்போது 2021 சட்டமன்ற தேர்தலில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க வேண்டி பெண்கள் கையில் கற்பூரம் ஏந்தி வழிபட்டனர்.நூற்றுக்கணக்கான பெண்கள் உதயநிதி ஸ்டாலின் பெயரில் தேங்காய், பழம் உடைத்து அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் சிவபத்மநாபன் பேசுகையில் அனைத்து மத உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் இயக்கம் திமுக என பேசினார்.‌ தொடர்ந்து வீரகேரளம்புதூர்  அரசு மருத்துவமனையில் பிறந்த ,4 குழந்தைகளுக்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், தங்க மோதிரம் அணிவித்தார். விழா ஏற்பாடுகளை ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுப்பிரமணியன் செய்திருந்தார்.நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சீனித்துரை க செல்லத்துரை, ஊராட்சி செயலாளர் முருகன் சேசுராஜன், சிறுபான்மை பிரிவு சேக் முகமது,சுரண்டை நகர நிர்வாகிகள் ஆறுமுகசாமி, சங்கரநயினார், சசிகுமார், பிரேம் குமார், கூட்டுறவு சங்க துணை தலைவர் கணேசன் மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.மேலும் சாம்பவர் வடகரையில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் சிறு குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்கப்பட்டது. சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரை பேரூர் கழக திமுக இளைஞரணி அமைப்பாளர் த.முத்து ஏற்பாட்டில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சாம்பவர் வடகரை அமைப்பாளர் பூ,ஆறுமுகச்சாமி  தலைமையில் மாவட்ட துணை அமைப்பாளர் ஹக்கீம்  முன்னிலையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் பேரூர் கழக அவைத்தலைவர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி முன்னாள் செயலாளர் ராமச்சந்திரன், துணை செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய பிரதிநிதிகள் அருணா, .சுப்பையா திமுக முன்னோடிகள் ராஜேந்திரன், அணைந்தபெருமாள், தலசந்தோஷ் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். திரிகூடபதி, குலையநேரி பகுதிகளிலும் உதயநிதி பிறந்த தினவிழா நடைபெற்றது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!