திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கார்த்திகை தீபம் ஏற்ற கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை ஆணையர் சிவ பிரசாத் தலைமையில் 3 காவல் உதவி ஆணையாளர்கள் தலைமையில் 12 ஆய்வாளர்கள் 25 சார்பு ஆய்வாளர்கள் தலைமையில் 250 போலீசார் திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்இந்து முன்னணி மாநில தலைவர் கடேஸ்வரர் சுப்பிரமணியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் 100 பெண்கள் 2 ள் பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா பாதுகாப்பு பணியினை ஆய்வு செய்தார்..மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற கோரி உயர்நீதிமன்றத்தில் இந்து முன்னணி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.இதனைத்தொடர்ந்து மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்தனர் .ஆனால் காவல்துறை மலைமேல் உள்ள சிக்கந்தர் பாவா பள்ளிவாசல் இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கூறி பல வருடங்களாக திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுகின்றனர் .இது ஆகம விதிகளுக்கு முரணானது என கூறி இந்து முன்னணியினர். எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.இதனை தொடர்ந்து கார்த்திகை தீபம் மலைமேல் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஏற்ற இந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர் அதனை தொடர்ந்து இன்று இந்து முன்னணி சார்பில் திருப்பரங்குன்றம் பதினாறுகால் கண்டன மண்டபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்பாட்டத்தில் 100 பெண்கள் உள்பட 500 பேர் கலந்து கொண்டனர்.திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சிவராஜ் பிள்ளை தலைமையில் மூன்று உதவி ஆணையர்கள் 12 ஆய்வாளர்கள், 25 சார்பு ஆய்வாளர்கள், உள்ளிட்ட 250 போலீசார் அசம்பாவிதம் ஏற்பாடாமல் தடுக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வஜ்ரா வாகனமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..