கீழக்கரையில் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக சார்பில் சாலை மறியல்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக சார்பில் இன்று திருக்குவளையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருந்த திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததைக் கண்டித்து இன்று (20/11/2020) தமிழகமெங்கும் பல இடங்களில் சாலை மறியல் நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து கீழக்கரை நகர் செயலாளர் பசீர் அகமது தலைமையிலும், இளைஞரணி பொறுப்பாளரும் வழக்கறிஞருமான ஹமீது சுல்தான் முன்னிலையிலும் சுமார் 30 க்கு மேற்பட்டோர் கீழக்கரை முக்கிய சாலையான வள்ளல் சீதக்காதி சாலையில் மறியல் செய்தனர்.

கீழக்கரை ஆய்வாளர் விஸ்வநாத் சார்பு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் தலைமை காவலர் இளமுருகன் தலைமை காவலர் ரமேஷ் உளவுப்பிரிவு சார்பு ஆய்வாளர் ஜேம்ஸ் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

கீழை நியூஸ்
SKV முகம்மது சுஐபு

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered