தமிழக அரசின் 7.5 இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தும்…கனவுக்கு தடையாக இருக்கும் வறுமை… செங்கல் சூளை தொழிலாளியின் மகளுக்கு நல்லுல்லங்கள் உதவலாமே..

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குட்டிமேய்கிபட்டி ஊராட்சி கீழக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(38). செங்கல் சூளையில் வேலை பார்க்கும் கூலி தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி(35). இவரும் தினக்கூலி வேலை பார்க்கிறார். இவர்களது மகள் தீபிகா(17). 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்துள்ளார்.

இந்நிலையில் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுதேர்வில் 511 மதிப்பெண் பெற்றார். இந்த மாணவிக்கு சிறுவயது முதலே மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. இவரது முயற்சிக்கு அரசு பள்ளி ஆசிரியர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர். இந்நிலையில் வறுமை காரணமாக வீட்டில் இருந்தே குடும்ப வேலைகளையும் கவனித்து கொண்டு மருத்துவ படிப்பிலும் தேர்ச்சி பெற படிப்பில் ஆர்வம் செலுத்தி வந்தார். இதைதொடர்ந்து நடந்து முடிந்த நீட் தேர்வில் 215 மதிப்பெண் பெற்று தற்போது அரசின் 7.5% உள் ஒதுக்கீடு காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைத்துள்ளது.

இந்த மருத்துவ படிப்பிற்காக கல்வி கட்டணம் வருடத்திற்கு ரூ.6.5 லட்சம் செலுத்த வேண்டிய நிலையில் போதிய வருமானமின்றி கூலி வேலை செய்யும் தனது பெற்றோர்களால் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலை உள்ளதாக மருத்துவ மாணவி தீபிகா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இருப்பினும் அரசின் 7.5% உள் ஒதுக்கீடு காரணமாக தன்னுடைய மருத்துவர் ஆகும் கனவு நினைவானதால் உணர்ச்சி பொங்க தமிழக அரசுக்கும், முதல்வருக்கும், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கும், வரவேற்று கொண்டாடிய ஆசிரியர்களுக்கும் கிராம பொது மக்களுக்கும் நன்றியை தெரிவித்தார். தனியார் மருத்துவ கல்லூரியில் 5 ஆண்டுகளுக்கு மருத்துவ படிப்பிற்கு ஆகும் செலவை செலுத்த முடியாத நிலையில் இருக்கும் ஏழை மாணவி தீபிகாவிற்கு தமிழக அரசும், சமூக ஆர்வலர்களும் முன்வந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும் என பெற்றோர்கள், ஆசிரியர்கள், மற்றும் கிராம பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக மருத்துவ கலந்தாய்வுக்கு சென்னை சென்று விட்டு ஊருக்கு திரும்பிய மாணவி தீபிகாவிற்கு கிராம பொது மக்கள் சார்பாக நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள் செல்வம், ஒன்றிய கவுன்சிலர் விமலாதேவி தயாளன், அரசு பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது போன்று ஏழ்மை நிலையில் உள்ள அரசு பள்ளி மாணவிகளின் மருத்துவ கனவை நிஜமாக்க கல்லூரி கட்டணத்தில் அரசு சலுகை ஏற்படுத்த வேண்டும். தனியார் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் படிப்பு செலவிற்கு உதவி கரம் நீட்ட வேண்டும் என்பது கிராம்பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

உங்கள் பொருளாதார உதவிகளை கீழ்கண்ட வங்கி எண்ணில் செலுத்தலாம்…

STATE BANK OF INDIA

R.RAVICHANDRAN   ( Cell# 9976633474)

20101424846   – IFSC CODE:-SBIN0014961

Madurai Alanganallur Branch

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

”கல்விக்காக செய்யும் தர்மமே நிரந்தர தர்மமாகும்… நாம் மறைந்த பின்பும் பயன் அளிக்க கூடியது”..

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered